தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. என்னுடைய மற்றொரு வலைப்பூவான சகோதரன் வலைப்பூவிற்கும் வந்து தங்கள் மேலான ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். - ஜெகதீஸ்வரன்

திங்கள், 3 ஜனவரி, 2011

இதுதான் இதேதான்



அம்மாவும்
அப்பாவும்
அவளும்
கைகளைக் கோர்த்தபடி
காட்சி தருகின்றார்கள்!

மகிழ்ச்சி வானத்தில்
பறவைகளும் வில்லும்
சிரித்துக் கொண்டிருக்கின்றன!

சரியாக பேசவே தெரியாத
அந்த மழலை
தன்
இதயத்தில் இருக்கும் அன்பை
இதைவிட சிறப்பாய்
எப்படி சொல்ல முடியும்!

அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.