திங்கள், 23 நவம்பர், 2009

சிங்காரச் சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரில்
என்உள்ளம் மயக்கும் அளவிற்கு
எதுவும் அழகில்லை என
கால்கடுக்க அலைந்துவிட்டு
புலம்பிக்கொண்டிருக்கிறேன் நான்

கடவுளிருக்கும் கோவில்களும்
கட்சிகளிருக்கும் கலகங்களும்
வானுயர்ந்த கட்டிடங்களும்
வரலாறுபடைத்திட்ட சிலைகளும்
நாகரீக எச்சங்களாய் தெரிகின்றன

கடற்கரை மணலோடு
குப்பைகளாய் காதலர்கள்
எல்லாம்தாண்டி நிர்வாணியாக
இருக்கிறாள் வங்கக்கடல்
காவேரி மைந்தனின்
கவலையை போக்க!

3 கருத்துகள்:

  1. அருமையாக உள்ளது..... ஆனால் சகோதரர் சென்னையின் இரவை சிறிது கவனிக்க வேண்டும்......பின்பு அதை பற்றியும் ஒரு பதிவு இட வேண்டும்...

    அது நகரத்தின் இன்னொரு முகம்....

    தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும்... இது என்னுடைய கருத்து...

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கரு்த்துக்கும் நன்றிகள், நண்பர்களே!!

    பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!