ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

உடல் சாரா கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல் சாரா கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 ஜூன், 2010

உறவுகள்





அம்மாவின் அழுகுரல்,

உறவுகளின் கதரல் என ஒட்டுமொத்த சோகத்தையும்

ஒருசேர அழைத்துக் கொண்டு

தாத்தாவின் இறுதிபயணத்திற்காக பயணப்படுகிறன்.

வழியில்…

யாரென அறியாவிட்டாலும்

பாசமுடன் கையசைக்கின்ற

தெருவோரக் குழந்தைக்கு

பதிலுக்கு கையசைக்கின்ற போது

புரிகிறது…

ஒவ்வொருவரும் உறவுகளே என!

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

திங்கள், 23 நவம்பர், 2009

சிங்காரச் சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரில்
என்உள்ளம் மயக்கும் அளவிற்கு
எதுவும் அழகில்லை என
கால்கடுக்க அலைந்துவிட்டு
புலம்பிக்கொண்டிருக்கிறேன் நான்

கடவுளிருக்கும் கோவில்களும்
கட்சிகளிருக்கும் கலகங்களும்
வானுயர்ந்த கட்டிடங்களும்
வரலாறுபடைத்திட்ட சிலைகளும்
நாகரீக எச்சங்களாய் தெரிகின்றன

கடற்கரை மணலோடு
குப்பைகளாய் காதலர்கள்
எல்லாம்தாண்டி நிர்வாணியாக
இருக்கிறாள் வங்கக்கடல்
காவேரி மைந்தனின்
கவலையை போக்க!

வெள்ளி, 22 மே, 2009

கால்கள்




தங்க கொலுசிட்டு
காரில் செல்லும் கால்களுக்கு,
எப்படி தெரியும்
தார்சாலையில் செருப்பின்றி
நடந்து செல்லும்
கால்களின் துயரம்!

பி.கு-
பதினொன்றாம் வகுப்பு
பருவக் குமரி முதல்
ஆறாவது படிக்கும்
அரைடவுசர் பையன் வரை
வெயிலில் வெறும் கால்களுடன்
பள்ளிக்கு வருபவர்களை
கண்டதன் வருத்தம்
இக்கவிதை...

நல்லவன்



குடிக்க பாலின்றி
குமறிக் கொண்டிருக்கிறது
குழந்தை...!
பாலாபிசேகம் செய்துகொண்டிருக்கிறான்
தலைவனின் கட்டவுட்டுக்கு
தகப்பன்...!

கூடு



இரை தேட
சென்ற பறவை
திரும்பி வந்தபோது
திகைத்து நின்றது
அதன் கூடிருந்த
மரத்தை காணாமல்!

ஞாபகம்




ஒவ்வொறு நாளும்
ஞாபகங்களை சுமந்துகொண்டு
முடிந்து விடுகிறது!

அடுத்த நாள் தொடங்குகிறது
எல்லா செயல்களையும்
ஞாபகங்களாக மாற்ற!

எறும்பு




வரிசை வரிசையாக செல்லும்
எறும்புகளுக்கு நடுவே
விரலால் கோடிட்டுவிட்டு
அமைதியாக இருக்கின்றேன்!

அவை கைவைத்தவனை
வசை பாடுவதில்லை
கையெடுத்து கடவுளையும்
துனைக்கு அழைப்பதில்லை!

கலவரமாக கலைந்தோடினாலும்
கவலை கொள்ளாமல்
மீண்டும் வந்துசேர்கின்றன
வரிசைக்கு நிதானமாய்!

பி.கு-
படத்திற்காக ஒரு கவிதை

சில படங்கள்
கவிதைகளுக்காக!
ஆனால் இக்கவிதை
இப் படத்திற்காக!

தீவிரவாதம்




தேவதைகள் கூட
கவச உடையனிந்து தான்
வருகின்றன
வரம் தருவதற்கு!

சிந்தனையில் கடவுள்



அழிந்துவிட்ட அகிலத்தை
மீண்டும் உருவாக்கிய கடவுள்
சிந்தனையில் இருக்கிறார்.

யாரை முதலில் உருவாக்குவது
ஆதாமையா? ஏவாலையா?
இல்லை, சென்றமுறை போல
சாத்தானையா?

பொம்மையின் கனவு




தெருவில் கிடக்கும் பொம்மை
கனவு கண்டுக் கொண்டிருக்கிறது
குழந்தையுடன் விளையாடுவதைப் போல!

பிஞ்சு கையெழுத்து




வீடு முழுவதும்
இறைந்துக் கிடக்கிறது
படிக்கவே தொடங்காத
ஒரு பிஞ்சின் கையெழுத்து
ஓவியமாய்!

பூனை




ஒவ்வொறு முறையும்
ஞாபகமாய் பாலை
மூடிவிட்டு வரும்போது
முறைத்துப் பார்க்கின்றது
பக்கத்து வீட்டுப் பூனை!

உங்களுக்காக




என் அன்பிற்குறிய
நீங்கள் நிலவை ரசிப்பதற்காக
எத்தனையோ இரவுகள்
எனக்கு பகலாகியிருக்கின்றன!

தேவதை




கால் உடைந்து கிடக்கும்
பொம்மையினைப் பார்த்து
வலிக்குதா எனக் கேட்கும்
குழந்தை தான்
உண்மையான தேவதை!

புதுஉறவு




அது தூரத்து சொந்தின் திருமனம்
சில தெரிந்த முகங்களும்
பல தெரியாத முகங்களும்
உளவுகின்ற மண்டபத்தில்
மலங்க மலங்க விழித்துக்கொண்டு
பலியாடு போல அமர்ந்திருக்கிறேன்!

படிக்காத மனிதர்கள் பலர்
தாங்களாகவே முன்வந்து
அறிமுகம் செய்து கொள்ளுகின்றபோது
படித்தவர்கள் மட்டும் பாறைபோல்
இறுகிக் கிடப்பதை
நினைத்துக் கொண்டிருக்கையில்
வருகிறது பந்திக்கான அழைப்பு!

உணவுகளின் வழக்கமான வரிசையில்
உண்ணும் போது தெரிகிறது
எனக்கருகே அமர்ந்திருப்பவரின் காத்திருப்பு
அவருக்காக அரைகுறையாக உண்டுவிட்டு
ஒன்றாக கையளம்பும் இடத்தில்
பிறக்கிறது எனக்கான புதுஉறவு!

பாதை



நான் செல்லுகின்ற பாதையானது
என் முன்னோர்களுக்குச் சொந்தமானது
என் பாதை சரியா? தவறா?
என்ற கேள்விகளோடு பயணத்தை தொடர்ந்தாலும்
கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது
அது சென்றடையும் இடத்தில்
எனக்காக அவர்களின் காத்திருப்பு!

வியாழன், 16 ஏப்ரல், 2009

உடல் சாரா கவிதைகள்

உடல் சாரா கவிதைகள்-

இந்தக் கவிதைகளை எந்த தலைப்பின் கீழ் வரிசைப்படுத்துவது என தெரியாமல் நான் விழித்த போது தோன்றியது தான் உடல் சாரா கவிதைகள் என்ற தலைப்பு.இந்தக் கவிதைகளில் உடல் சார்ந்த எண்ணங்கள் இல்லை.இதனுடைய சில கவிதைகள் தலைப்பில்லா கவிதைகளாக மாறிவிட்டன.உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.அதுவே என்னை மேன்படுத்திக் கொள்வதற்கு உதவும்.


முகமூடி கவிதை

ஒருமுகம் போதவில்லை எனக்கு!
ஓராயிரம் தேவைப்படும் என்பது கணக்கு!
முகமாற்று சிகிச்சை செய்தால்
முடியுமோ இந்த வழக்கு!
முகமூடி சொல்கிறது
தானொன்றுதான் தீர்வென அதற்கு!


முடிவில்லா தீப்பந்தம்

ஒவ்வொரு தீக்குச்சியும்
கையை சுட்டுவிடும்
அளவிற்கு எரிந்தபின்
அனைந்து விடுகிறது!
இந்த மனம்மட்டும்
முடிவின்றி எப்பொழுதும்
எரிந்துகொண்டே இருக்கிறது!


அறிவுஜீவிகள் நாம்

கடவுள் எங்கிருக்கிறார்?
ஏதுசெய்து கொண்டிருக்கிறார்?
எந்தரூபத்தில் இருக்கிறார்?
புரியாத ஒன்றைப் பற்றி
பல காலம் பேசிவிட்டு
அருகேயிருக்கும் குழந்தையை
ரசிக்க மறந்துவிடுகின்ற
அறிவுஜீவிகள் நாம்!


விலகியிருங்கள் நண்பர்களே

விலகியிருங்கள் நண்பர்களே
விலகியிருங்கள்
தெரு நாய்களிடமும்
தெரிந்த ஆசிரியர்களிடமும்
ஏனென்றால் இரண்டும்
எப்போது குழையும்
எப்போது குறைக்கும்
என யாரும் அறியாததால்

பி.கு-
இந்த விலகியிருங்கள் நண்பர்களே கவிதை என் வாழ்க்கையின் மிக முக்கிய காலக் கட்டத்தோடு பொருந்தியது.நாம் நெருங்கிப் பழகும் சில ஆசிரியர்கள் முதலில் நம்மை வைத்து எல்லா விஷயங்களையும் அறிந்துக் கொள்கிறார்கள்.பின்பு அதை நமக்கு எதிராகப் பயண்படுத்துகிறார்கள்.அது போன்ற ஒரு சம்பவம் என்னுடைய வகுப்பில் நடந்தது.அந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் உதித்த கவிதை தான் இது.
இவ்வாறு எழுதியதைக் கண்டு என்னை ஆசிரியர்களை வெறுப்பவர்களின் பட்டியளில் இணைத்து விடாதீர்கள்.என்னுடைய பெற்றோர்கள் இருவருமே ஆசிரியர்கள்.


உடல் சாரா கவிதைகள், முகமூடி கவிதை, முடிவில்லா தீப்பந்தம்,
அறிவுஜீவிகள் நாம், விலகியிருங்கள் நண்பர்களே

வெள்ளி, 20 மார்ச், 2009

உடல் சாரா கவிதைகள்

உடல் சாரா கவிதைகள்

வானத்தில் கூட
போர் நிகழ்கின்றதா
மழை பெய்தபின் வரும்
வான’வில்’லை பார்த்து
கேள்விகள் எழுப்புகிறது
ஒரு மழலை

எதையுமே சந்தேகத்தோடு
ஆராய்ச்சி செய்திடும்
என்னுடைய சமூகமே
பறவைகளின் எச்சத்தில்
செய்யும் ஆராட்சியை
இதோடு விட்டுவிட்டு
ஏதாவது நல்லதை
செய்யப் பாருங்கள்

வானம் சுற்றியிருந்த
வனத்தின் சாம்பல்கள்
கருமேகமாய் மாறிக்கொண்டிருந்தன
பள்ளிவிட்ட குழந்தையாய்
தாயிடம் திரும்பியது
மழைத் துளிகள்
காசுகொடுத்து வாங்கமுடியாத
வாசமொன்று கிளம்பியது
வறண்ட மண்ணிலிருந்து

நம்முடன் சேர்ந்து
ஒன்றாய் இருந்த
நண்பர்களை யெல்லாம்
மறந்து விடுகிறது
எதிரியை மறக்காத
நன்றிக்கெட்ட மனது

உடல் சாரா கவிதைகள்,

உடல் சாரா கவிதைகள்

எனக்கு பெண்களின் உடலைப் பற்றி கவிதை எழுதுதலில் சற்று ஆர்வம் நிறைந்திருக்கின்றது.இருந்தாலும் எல்லோருக்கும் பிடித்துபோல கவிதை எழுத ஆசை.(நான் காதல் கவிதைகளையும் பெண்ணுடல் பற்றி எழுதுவதும் என் பிடிக்காது.)சற்று கஸ்டப்பட்டு நான் எழுதிய கவிதைகள் தான் இவை.சில கவிதைகளை புரிந்துக் கொள்ள உங்களுக்கு சிரமாக இருக்கும்.அந்த கவிதைகளை பல முறை படிக்க வேண்டிய அவசியமும் ஏற்படலாம்.இருந்தாலும் எல்லா கவிதைகளையும் எளிய முறைப்படுத்த சற்று முயற்சி எடுத்திருக்கிறேன்.இந்த உடல் சாரா கவிதைகள் தொகுப்புகள் போல வெளிவந்து கொண்டே இருக்கும்.வளர்ந்து வருபவன் என்பதால் பிழைகளை பொறுத்தருளுங்கள் நண்பர்களே.

புத்தம் புதியதான
ஓர் சிந்தனையை
பகிர்ந்து கொண்டிருந்தேன்
யாரோ ஒருவர் சொன்னவைதான்
இதென்றான் நண்பன்
ஆம் நண்பா சென்றபிறவியில்
நான் சொன்னவைதான் அவையென்றேன்
நம்ப மறுத்து சென்றுவிட்டான்
நீங்கள் சொல்லுங்கள் உண்மையென்று

மழை வரும் போது
குடைதேடி ஓடுபவர்களை பார்த்தால்
சிரிப்பு வருகிறது எனக்கு
நான் மழையின் ரசிகன் என்பதால்

ஒவ்வொறு மூழ்கும்
எறும்பிற்கும் ஒருஇலை
போடப் படுகின்றது
எங்கோ இருக்கும்
புறாவிடமிருந்து.
நீங்கள் எறும்பாக இருந்தால்
இலைக் கேளுங்கள்
புறாவாக இருந்தால்
இலையைப் போடுங்கள்

நாளை நடக்கவிருக்கும்
விருந்திற்கு எல்லோரும்
தயாராகிக் கொண்டிருக்கின்றனர்
நன்றாக மெய்ந்துகொண்டிருக்கிறது ஆடும்
நாளை பலியாவதை அறியாமல்

பனி உருகி
நதியாக மாறி
கிளைகள் பிரித்து
கடலில் கலக்கும்
நிகழ்வுகளுக்கு நடுவே
என்கால் நனைத்து போகிறது.

நட்சத்திரங்களும் நிலவும்
இல்லாமல் போன
வெற்று வானத்தை
பார்த்து ரசிக்க முடியவில்லை
யாரேனும் வரைவதற்கு தெரிந்தால்
வரைந்து விடுங்களேன் சூரியனோடு