
நெடு நாட்களாய்
எதுவும் மாறவில்லை
நாம்வாழும் தேசத்தில்.
மாற்றங்கள் ஆழ்பவர்களின்
பெயரில் மட்டுமே
நடந்து கொண்டிருக்கின்றன.
மக்களின் வாழ்க்கையிலோ
மாற்றங்களின் விதிகள்
பொய்த்துப் போய்விட்டன.
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
தூக்கம் கலைந்து
எழுந்து விடுகிறோம்.
வந்துபோகும் தேர்தல்களில்
வாக்களித்துவிட்டு வந்துவிடுகிறோம்
மீண்டும் தூங்குவதற்கு.
கனவிலாவது நம்தேசம்
நன்றாக இருப்பதால்.








