ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 ஜூலை, 2012

கருப்பு நிறமல்ல, வரம்



வெண்தோல் வேண்டி
வேண்டாத களிம்பு தடவி!

வெளியில் செல்லாமல்
வெயிலில் துள்ளாமல்!

அறைக்குள் முடங்கி
ஆடைக்குள் உறக்கியது போதும்!

உண்மையை உணர்க…

ஊருக்கு உழைத்தோம்- அதனால்
உடலெல்லாலம் கருத்தோம்!

கருப்பு வெறும் நிறமல்ல
கடவுள் கொடுத்த வரம்!

அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.
sagotharan.wordpress.com

திங்கள், 3 ஜனவரி, 2011

இதுதான் இதேதான்



அம்மாவும்
அப்பாவும்
அவளும்
கைகளைக் கோர்த்தபடி
காட்சி தருகின்றார்கள்!

மகிழ்ச்சி வானத்தில்
பறவைகளும் வில்லும்
சிரித்துக் கொண்டிருக்கின்றன!

சரியாக பேசவே தெரியாத
அந்த மழலை
தன்
இதயத்தில் இருக்கும் அன்பை
இதைவிட சிறப்பாய்
எப்படி சொல்ல முடியும்!

அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.

புதன், 13 அக்டோபர், 2010

பிச்சைக்காரன்



சுவாமி தரிசனம் முடிந்து
கோவிலின்வாசலுக்கு வருகிறேன்
கைகளை ஏந்தியபடி பலர் அமர்ந்திருக்கின்றனர்
பையி்ல் இருக்கும் சில்லறைகளை
சிலருக்கு கொடுத்துவிட்டு நடக்கிறேன்
கிடைக்காதவர்கள் நினைத்திருக்கக்கூடும்
நானும் பிச்சைக்காரனென!

சனி, 10 ஜூலை, 2010

கொலை செய்யும் ஆசிரியர்கள்



படிக்கச் செல்லும்

பெண் குழந்தைகளின்

பாவாடைகளில் குறியாக இருக்கிறது

ஆசிரியர் சமூகம்!


மழலையாக நினைக்கச் சொல்லி

பெற்றோர்கள் விட்டுவந்த குழந்தைகளை

மனைவியாக நினைக்க சொன்னது யாரோ!

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.

வெள்ளி, 26 மார்ச், 2010

இரவுப் பெண்




சீவி சங்காரித்து
அலுவலக்ம் போக ஏகம் பேர்
நிற்கும் ரயில் நிலையத்தின்
ஓர் அதிகாலை….
வந்து நிற்கின்றாள்
பெண்ணொருத்தி!.
இரவு தூங்கவில்லையென
அந்தப் பெண்ணின் கண்கள் சொல்லுகின்றன
அதிகம் உழைத்தை அவள் சோர்வு சொல்லுகின்றன
நீங்கள் தவறாக யூகம் செய்யாதீர்
அவள் கால்சென்டரில் வேலை செய்யும்
கன்னிப்பெண்!

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

ஒருவன்




ஒன்றே குலம் ஒருவனே தேவன்
அதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை
அந்த ஒருவன் யாரென்பதை தவிர!

புதன், 5 ஆகஸ்ட், 2009

புரியாதவள்




நேற்று வரை பாதுகாத்து வைத்திருந்த
எந்தன் இதயத்தை உந்தன் பருந்து பார்வையால்
கொத்திக் கொண்டு பறந்து போனாய்,
அதை உனக்கு பரிசாக கொடுக்க வந்தபோது!

திங்கள், 27 ஜூலை, 2009

குப்பைத் தொட்டி




எவனையோ ஓர் இரவு சுமந்ததில்
என்னை பத்து மாதம் சுமந்தவள்
காமம் தீர்ந்து அவன் போனபின்பு
கருவலேயே கலைக்க முடியாமல்
பெற்றெடுத்து கொடுத்து போயிருக்கிறாள்
குப்பைத் தொட்டிக்கு பிள்ளையாய்

வெள்ளி, 22 மே, 2009

உங்களுக்காக




என் அன்பிற்குறிய
நீங்கள் நிலவை ரசிப்பதற்காக
எத்தனையோ இரவுகள்
எனக்கு பகலாகியிருக்கின்றன!

சனி, 18 ஏப்ரல், 2009

வானவில்

வானவில்


சாலையோர சாக்கடையில்
சிந்தியிருக்கும் சீமெண்ணை
இல்லாத வானவில்லையும்
இயல்பாக காட்டுகிறது!

கவிதை

பிரபலத்தின் கவிதை

பிரபலத்தின் கவிதை



ஒரு பிரபலத்தின்
கவிதைப் புத்தகமது
சிலர் கவிதைகள்
பார்த்தவுடன் புரிந்துவிடுகின்றன.
சிலர் கவிதைகள்
படித்தாலும் புரியமறுக்கின்றன
என்ன செய்வதென தெரியாமல்
அந்த பிரபலத்திடமே கேட்டால்
புரியாத கவிதையை
புரியவைத்து சென்றார்
அடுத்தநாளில் காத்திருந்தது
அனைத்து கவிதைகளும்
அவருக்காக.....

வெள்ளி, 20 மார்ச், 2009

தூக்கம்

உடல் சாரா கவிதைகள்- தூக்கம்

கவலைகள் இல்லாமல்
கற்பனைகள் குறையாமல்
கனவுபல கண்டு
இன்பமையாய் தூங்கினேன்
கருவரையில் சிசுவாக

ஏனோ பிறந்தபின்
படித்து உழைத்து
பண்பாய் வாழ்ந்து
பலமுறை தூங்கினாலும்

இன்பமாய் பலநாள்பின்
இன்றுதான் தூங்குகிறேன்
கல்லறையில் பிணமாக.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்

தந்துவிடு

ஆடையின்றி அம்மனமாய்
அலைகிறது என்காதல்
உடுத்துக்கொள்ள தந்துவிடு
உந்தன் காதலை !


தேடுதல் வேட்டை

பிறந்த இடம் தேடி
அலைந்து கொண்டிருக்கிறது
என் காதல் !


கவிதை

காதல் கவிதையொன்று
எழுதச் சொன்னான்
அவன் காதலிக்காக
என் நண்பன் !
எழுதிய கவிதையை
படித்து விட்டு
அற்புதமாக இருப்பதாக
பாராட்டி தீர்த்தான் !
இருக்காத பின்னே
உன்னை நினைத்து
எழுதியதல்லவா அக்கவிதை !



காதல்கரு

என்மனதின் மகரதப்பொடிகளை
சுமந்த வண்டுகள்
எப்பொழுது வேண்டுமானாலும்
உன்னிடம் வரலாம்
தயாராய் இரு
காதல்கரு தரிப்பதற்கு !

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

வீர வணக்கம் !!!


நண்பனுக்காக என்றொரு கவிதையை எழுதியிருந்தேன்.முத்துகுமார் தன் உயிரை தியாகம் செய்யும் முன்பே.அதை சற்று திருத்தி தற்போது வெளியிட்டு அந்த தியாகிக்கு வீர வணக்கம் செய்கிறேன்.

செந் தீயால்
சாவை சந்தித்தாய்
பாவப்பட்ட மக்களான
பச்சை தமிழினத்துக்காக

தலைமுறைகள் சில
தடம்தெரியாமல் போனபின்னும்
மாற்றங்கள் என்றெதுவும்
மாறவில்லை நண்பா

சொந்தமண்ணில் கால்பதித்தால்
சொந்தமில்லாமல் போய்விடுகின்றது
கன்னிவெடியில் சிக்கி
கைகளும் கால்களும்

உயிருக்கு பயந்து
நாடுகடந்து போனாலும்
வாழ்வதற்கொரு வழி
எங்குமில்லை நண்பா

தாய்மண்ணை காக்கா
கூட்டம் உயிர்விடும்போது
உயிரைக் காக்க
விட்டிருக்கிறோம் தாய்மண்ணையே

எங்களிடம் மிச்சமிருப்பதெல்லாம்
இறந்தவர்களின் நினைவுகளும்
இருப்பவர்களின் கனவுகளும்
மட்டுமே நண்பா

ஈழம் பற்றிய சிந்தனைக்கு fortruetamilan.blogspot.com க்கு செல்லுங்கள்.

வீர வணக்கம் வீர வணக்கம்!!!