
தங்களுடைய பதவிநாற்காலிக்காக
தமிழகத்திலிருந்து இந்திமொழியை
விரட்டிய கூட்டம்
மடிந்துபோகும் தமிழினத்திற்காக
அறிக்கை மட்டும்
விட்டுக் கொண்டிருக்கிறது
என் நிலை
என் உடன்பிறந்தோரெல்லாம்
உயிர்விடும் நேரத்தில்
நான் உறங்கிக்கொண்டிருக்கிறேன்
ஒன்றுமறியாதவனாக
கடவுளிடம் கேள்வி

கல்மனம் படைத்த கடவுளே
உன்மனைவியை கடத்தினால் மட்டுமா
இலங்கைக்கு செல்வாய்
ஆமென்று சொன்னால்
அதையும் செய்வதற்கு தயார்
ஆனால் உன் மௌனத்தால்
எம் இனமல்லவா இல்லாமல்
போய்க் கொண்டிருக்கிறது
சொல்லுங்கள்

அனுமன் வைத்த தீ
இன்னுமா எரிந்து கொண்டிருக்கிறது
என் தமிழ்க்குழந்தைகள்
வாழும் இலங்கையில்








