ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

காதல் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 மே, 2010

அமிலக் காதல்



காதலித்து விட்டு

ஏமாற்றும் பெண்களை

கடவுள் தண்டிப்பதில்லை!

கடமையென சட்டமும் தண்டிப்பதில்லை!

ஏமாந்த ஆண்களின்

நினைவாக இருக்கின்றன

அமிலத்தில் கரைந்து போன

பெண்ணின் முகங்கள்!.

(காதலிப்பதாக சொல்லி ஒரு ஆண் ஏமாற்றினால், பெண் முறையிட இங்கு சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு ஆணை பெண் ஏமாற்றினால் இங்கு அவனுக்கு துணையாக எதுவும் இல்லை. எனவே பல இளைஞர்கள் ஆயுதமாக அமிலத்தை எடுக்கின்றார்கள்.)

சனி, 11 ஜூலை, 2009

நான் கவிதைப் பிழியப்பட்ட காகிதம்




நண்பன் கவிதைக் கேட்டானென
நள்ளிரவு விழித்து எழுதிய கவிதை
அடுத்த நாள் அவன்காதலிக்கு சொந்தமானது
அவனின் காதல் நினைவாக!

வெள்ளி, 22 மே, 2009

கனவு




எல்லோரும் உறங்குவதற்காக
கனவு காண்கின்றார்கள்!
கனவு காண்பதற்காக
நான் உறங்குகிறேன்!
நீ கனவில் வருவாயென!

காதல் கனி




நீ கடித்து கொடுத்த
நெல்லிக் கனியை,
காதல் கனியென
நம்பிக் கொண்டிருக்கிறது
பாழாய்போன என்மனது!

உண்மையாகும் பொய்கள்




நீ உண்மையை மட்டுமே
சொல்லுகிறாயென ஒருநாள் வியந்தாய்!
உனக்காக நான் சொல்லும் பொய்களெல்லாம்
காதல் தேவதையால்
உண்மையாக்கப் படுதலை அறியாமல்!

தாமரை




தொலைவிலிருக்கும்
குளத்திற்கு சென்று
வெண் தாமரையை
நீ பார்க்கத் தேவையில்லை!
அருகில் இருக்கும்
கண்ணாடியைப் பார்த்தாலே போதும்!

நிலவு




நிலம் வாங்கவில்லையா
நிலவில் வசிக்க என்றாய்!

நான்தான் நிலவோடு வசிக்கிறேனே என்றேன்
உன்னைக் காட்டி!

நீ வெக்கப்பட ஆரமித்தாய்
பரவியது நிலவு வெளிச்சம்!

குழந்தை போல




ஊருக்கு சென்ற
அன்னையின் வரவை எதிர்நோக்கி
வாசலில் காத்திருக்கும்
குழந்தை மாதிரி
என்மனமும் காத்திருக்கிறது
உந்தன் வருகைக்காக தினமும்!

வெள்ளி, 20 மார்ச், 2009

தலைப்பில்லா கவிதைகள்

காதல் பொங்கிவழியும் இந்தக் கவிதைகளை தலைப்பின் மூலம் சிறை வைக்க மனமில்லை.தலைப்பில்லாமல் சிறகசைக்கும் கவிதைகளை சுகந்திரக் கவிதைகளாக உணருகின்றேன்.வெறும் காதல் மட்டுமே இதன் கரு.

ஊரே வாயாடியென
அழைக்கும் என்னை
ஊமையாக மாற்றுவது
நீ மட்டும்தான்

உன் சேலையுடன் விளையாட
காத்துக் கொண்டிருக்கின்றது காற்று
சொறுகிவைத்திருக்கும் முந்தானையை எடுத்துவிடு
பாவம் எவ்வளவு நேரம்
அது காத்துக் கொண்டிருக்கும்

உன்னைப்பற்றிய சிந்தனையிலேயே
சர்வசதா காலமும்
நான் இருப்பதை
தியானம் என்கின்றனர்
புரியாதவர்கள்.

உன்னுடைய அன்னைக்கு பிறகு
என் காதல்தான் சுமந்துவருகிறது
உன்னை.


நான் பார்ப்பதற்கு
கொடுரமாக இருக்கிறேன்
என்பதற்காக என்னை ஒதுக்கிவிடாதே
கடுமையான சிப்பிக்குள்தான்
மென்மையான முத்திருக்கும்
என்பதை மறந்து விடாதே


உன்னைப் பார்ததிலிருந்து
என்னை மறந்துபோனேன் நான்
யாராவது என்னைப்பற்றி கேட்டால்
எதுவும் தெரியவில்லை எனக்கு
உன்னைப் பற்றி உளறிவிட்டு
நகர்ந்துவிடுகின்றேன்.

என் விழிகளுக்கென்ன
வாஸ்துவா இருக்கின்றது
இடம் பார்த்து உரசிப்போக.

தேவதைகள் வசிக்கும் ஊரில்
பிறந்துவிட்ட பாவச்சிறுவன் நான்
அவர்களிடையே வாழும்போது
கட்டிக்காப்பற்றிய இதயத்தை
உன்னிடம் கொடுத்துவிட்டு
என்னுடைய ஊருக்கு
திரும்பிக் கொண்டிருக்கிறேன்
இதயம் இல்லாதவனாய்.

உன்னுடைய நிர்வாணம்கூட
பாதிக்காது என்னை
ஆனால் இப்பொழுது
உன்கென்டைக்கால் கூட
மோகமூட்டுகின்றது
காதலுக்கும் காமத்திற்கும்
ஒருநூல் அளவே
இடைவெளி என்பது
உனக்கு தெரியாமலா இருக்கும்.

நாத்திகனாக இருந்தவனை
நீ வெள்ளிக் கிழமைகளில்
கோவிலுக்கு செல்கிறாய்
என்ற காரணத்திற்காக
ஆத்திகனாக மாற்றியது
காதல் தான்

நான் காதல் தேவதையால்
கவிதை எழுதுவதற்காக அனுப்பட்டவன்
ஒருவேளை நீங்கள் அனுப்பட்டிருக்கலாம்
காதல் செய்வதற்கு மட்டும்

வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

காதல் தேவதைக்கு

காதல் தேவதைக்கு

இது காதல் மாதம்.மதங்களையும் மொழிகளையும் தாண்டி மனங்களை இணைக்கும் மாதம்.மனிதனை கடவுளாக மாற்றும் மாதம்.அன்பு என்றொரு அச்சாணி கொண்டு மனிதத்தையே சுழலச் செய்யும் மாதம்.

உலக அளவில் காதலின் புனிதம் அறியப்பட்டிருக்கும் நிலையில் காதலர்கள் என்ற பசு போர்வைக்குள் இருக்கும் காமப் புலிகளை கண்டுப்பிடித்து தண்டிக்க வேண்டியதும் நம்முடைய கடமைதான்.
உண்மைக் காதலைப் போற்றுவோம்.உலகத்தை உய்விப்போம்.

என்னுடைய கவிதைகளைப் படித்து என் காதலை புரிந்து கொள்ளுங்கள். எனக்கு கனவு காதலிகளை தந்து கவிதை எழுத உதவிய காதல் தேவதைக்கு இந்த கவிதைகள் சமர்ப்பனம்.

காதல் கவிதைகள் மட்டுமல்ல
காதல் செய்பவர்களும் அழகுதான்.