நம்வீடாகி ஆகிவிட்டன
நாட்கள் பல
காக்கையை மட்டுமே
பார்த்திருக் கின்றார்கள்
நம்நகர குழந்தைகள்
அழிந்துவரும் உயினங்களின்
பட்டியலில் சேர்த்துவிட்டு
அமைதியாக இருந்துவிடுகிறோம்
அடுத்த தலைமுறைக்கு
நாம் விட்டுசெல்லும்
உலகில் எதுவுமில்லை
குயில்கள் கூவுவதையும்
மயில்கள் ஆடுவதையும்
காணப்போவதில்லை நம்தலைமுறைகள்
புலம்பெயரும் பறவைகளின்
வசதிக்காக தீபாவளியையே
புறக்கணிக்கும் மக்களுமுள்ளனர்
நான் எதிர்பார்பதெல்லாம்
உயிர்களுக்கு தீங்களிக்காத
ஒப்பற்ற சமூகத்தை
தலைவர்களின் சிலைகளில்
எச்சங்களாய் மிச்சமிருக்கின்ற
பறவைகளையாவது காப்பாற்றுவோம்.








