புதன், 28 ஜனவரி, 2009

காதல் கவிதைகள்

கஞ்சன்
மேடையில் பேசும்போது
வள்ளலாக வார்த்தைகளை தந்துவிட்டு
உன்னிடம் பேசும்போது மட்டும்
கஞ்சனாக மாறிவிடுகிறது
என் தாய்மொழி!




காய்ச்சல்
மழையில் நனையாதே
காய்ச்சல் வந்துவிடும் என்றேன்
‘எனக்கா’ என்றாய் ஆவலாய்
இல்லை மழைக்கு!

பூப்பெய்திய நட்பூ
நேற்றுவரை சிறுவர்களாய்
இருந்தநாம் பெரியவர்களானோம்
உன் தாயின் சேலைகிழித்து
நீ அணிந்து வந்தாய்
என் தந்தையின் வேஷ்டிகிழித்து
நான் அணிந்து வந்தேன்
வழக்கமாய் விளையாடும் தோப்பில்
நெடுநேரம் மௌனமாய் இருந்தபோது
நம்நட்பும் வந்தது காதலாக
நம்மைபோலவேப் பூப்பெய்தி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!