ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

திங்கள், 27 ஜூலை, 2009

குப்பைத் தொட்டி




எவனையோ ஓர் இரவு சுமந்ததில்
என்னை பத்து மாதம் சுமந்தவள்
காமம் தீர்ந்து அவன் போனபின்பு
கருவலேயே கலைக்க முடியாமல்
பெற்றெடுத்து கொடுத்து போயிருக்கிறாள்
குப்பைத் தொட்டிக்கு பிள்ளையாய்

புதன், 22 ஜூலை, 2009

பாவம் ரோஜாக்கள்




உன் வருகையை எதிர்பார்த்து
என் கையிலிருக்கும் ரோஜாக்களெல்லாம்
வாடிப்போய் விட்டன்!
சீக்கிரம் வந்து விடு
பாவம் ரோஜாக்கள்!

சொளக்காட்டு பொம்மை



குருவி விரட்டும் பொம்மைக்கு
கோர்ட் சூட்டு போட்டு
அழகு பார்த்த விவசாயி
வயலில் இருக்கிறான்
வெறும் கொமணத்துடன்!

ஹிட்லர்




தனியொரு ஆளாக
தரணியாள நினைத்தவன்!

சாமானியர்களின் சர்வதிகாரியாக
சமாதிகளை நிறைத்தவன்!

உலகமே எதிர்த்தாலும்
உள்ளம் கலங்காதவன்!

வன்முறைகளின் அரசனாக
வாழ்ந்துக் காட்டியவன்!

காதலியை கடைசிவரை
காதல் செய்தவன்!

இவனொருவன் தான்
விதியையும் மாற்றி
வென்று காட்டியவன்!

காதல் கனி




நன்கு காய்த்த மரத்தில்
கல்லெடுத்து அடித்துக் கொண்டிருந்தேன்!
கல்களே கிடைத்துக் கொண்டிருந்தன
நீ பரிதாப் பட்டபோதுதான்
கிடைத்தது... காதல்கனி!

வியாழன், 16 ஜூலை, 2009

ஆதரவு தாருங்கள்




காதல் கவிதைகள் எழுதும்
ஒருகாதல் அனாதை நான்!
யாராவது உங்கள் காதலை
கொடுத்துச் செல்லுங்கள்,
எனக்குத் துணையாக!

கடவுளின் குழந்தை




ஆதாமுக்காக ஏவாலை மட்டும்
படைத்த ஆண்டவன்!
எனக்காக படைத்திருக்கிறான்
ஏராளமான பெண்களை!

வள்ளல்கள்




தத்தளிக்கும் முல்லைக் கொடிக்கு
தடி கொடுத்தால் போதாதா?
தமிழ்பாடும் கிழவிக்கு
தங்ககிலி கொடுத்தால் போதாதா?
காயம் பட்ட புறாவுக்கு
காலில் மருந்திட்டால் போதாதா?
மயில் ஆடும் அழகை
மதிநிறைய் ரசித்தால் போதாதா?

அறிவுகொண்டு ஆராய்ந்து கொடுக்க
அவகாசம் இல்லாமல் போனதற்கு
அன்புதான் காரணம் என்கின்றனர்
அனைத்தும் உணர்ந்தவர்கள்!

அதனால் தான்
மயிலுக்கு துணி! முல்லைக்கு தேர்!
ஔவைக்கு கனி! பறவைக்கு தசை!
வள்ளல்கள் கதைகளில்
வற்றாது நிறைந்திருக்கிறது
நகைச்சுவை நிகழ்வுகள்!

சனி, 11 ஜூலை, 2009

சட்டம் ஒரு ஆமை




இரண்டு நூறுரூபாய் திடுடியவன்
இரண்டு வருடங்களாய் இருக்கிறான்
விசாரனைக் கைதியாக
இன்னும் கூட நாளாகலாம்
விசாரனை முடித்து தீர்ப்புதர
அவன் விடுதலைச் செய்யப்படும்போது
அவனிடமிருந்து விடுதலையாகியிருக்கும்
இளமையும் இனிமையும்!

நான் கவிதைப் பிழியப்பட்ட காகிதம்




நண்பன் கவிதைக் கேட்டானென
நள்ளிரவு விழித்து எழுதிய கவிதை
அடுத்த நாள் அவன்காதலிக்கு சொந்தமானது
அவனின் காதல் நினைவாக!

வெள்ளி, 10 ஜூலை, 2009

ராமர் பாலம்




கடவுள் மனிதனைக் காத்தது போய்
மனிதன் கடவுளை காத்து நிற்கிறான்
மக்களுக்கு நன்மையென்றால்
ராமனென்ன மறுக்கவாப் போகிறார்
பாலம் உடைத்து பாதை அமைக்க?

வான் மேகம்




அடியே வெள்ளை மேகமே
உன்னால்தான் மறைந்து போகிறான்
என் லட்சியமென்னும் சூரியன்!

வேண்டியதெல்லாம்




எம் தமிழ்மக்கள்
சொர்கத்திற்கு வரும்போது
மேளங்களின் தாளங்கள் வேண்டாம்!

அது அவர்களுக்கு
வெடிகுண்டுகளை ஞாபகம் செய்யக்கூடும்!

நாதசுரங்களின் நாதங்கள் வேண்டாம்
அது அவர்களுக்கு
துப்பாக்கிகளை ஞாபகம் செய்யக்கூடும்!

இன்னும் அங்கிருக்கும்
கற்பக விருச்சமோ காமதேனுவோ,
சோமபானமோ சொக்கும் நடனமோ,
எதுவும் வேண்டியதில்லை!

அவர்களுக்கு வேண்டியதெல்லாம்
இங்கு கிடைக்காத அமைதி மட்டுமே!