ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

வெள்ளி, 22 மே, 2009

ராஜிவ்-கொலையல்ல தண்டனை




தம்மினத்தை காப்பாற்ற போராடிய
தமிழினத் தலைவனை கொன்றுவிட்டு
தண்டனை என்கிறார்கள்!

உண்மையில்
தம்மினத்தை அழித்ததற்காக
தமிழ் பெண்ணொருத்தி கொடுத்தே
தண்டனை! தண்டனை!! தண்டனை!!

கடவுளின் கவலை




உலக மக்களுக்காக
சிலுவையில் இறந்தவரும்
கல்லடி வாங்கியவரும்
கன்னத்தில் கைவைத்து
கவலையில் அமர்ந்திருக்கின்றனர்!

அவர்களின் பெயரை
அதிகமாய் கூறிக்கொண்டு
கொலை செய்திடும்
மனிதர்களை கண்டு!

ஆதரவு





பெண்பித்தன் என்றென்னை
புகழ்ந்திரும் எதிர்க்கூட்டம்
வாய்பிளந்து பார்க்கிறது
வருவோர் போவோரையெல்லாம்!

சாலையில் செல்லும்
சேலைகளின் விலகல்களை
உற்றுநோக்கும் உயர்ந்தவர்கள்
உரிமையோடு வசைபாடுகின்றனர்!

காமக் கவிதை
கவிதையின் ஓர் அங்கம்
என்கருத்தை ஆதரிப்போரெல்லாம்
என்னுடைய சங்கம்!

எச்சரிக்கை




பிச்சைக் கேட்கிறேன்
பிள்ளைகளை மட்டுமாவது
புத்தனாக வளருங்கள்-இல்லையேல்
பிசாசாகிவிடும் உங்களைப்போல!

மாங்காய்த் தீவு




தினம் தினம்
சாலையில் கிடக்கும்
சாதாரண மனிதர்களின் பிணங்களை
சாதனைகளாக பேசுகின்ற
மரண தேவன்
ஆட்சி செய்கிறான்
இந்த மாங்காய்தீவில்!

அன்னையான காதல்




தாளாட்டுப் பாடி
தட்டிக் கொடுத்து
தூங்க வைக்கிறது காதல்!
உன்னைப் பற்றி
கனவு காணச் சொல்லி!

தலைப்பில்லா கவிதைகள்




களிக்கின்ற மனம்
கவிதைகளின் பிறப்பிடம்!

செழிக்கின்ற நிலம்
செம்வறுமையின் இறப்பிடம்!

துளிர்க்கின்ற மரம்
துரத்தின் மறைவிடம்!

பழிக்கின்ற மனிதம்
பாவத்தின் உரைவிடம்!

விலைமாது



என் பசிக்கு
அவள் உணவானாள் - ஏனென்றால்
அவள் பசிக்கு
அவளிடம் இல்லை உணவு!

அபிசேகம்



அம்மனுக்கு அபிசேகம் செய்ய
ஆலையத்திற்கு சென்றேன்!
பீடம் மட்டும் இருப்பதாக
புலம்பிக் கொண்டிருந்தார் அர்ச்சகர்!

இந்த அதிசயத்தை சொல்ல
உன் வீட்டிற்கு வந்தால்- ஆச்சிரியம்!
உனக்கு அபிசேகம் செய்ய
அங்கே இருக்கிறார் அம்மன்!

பந்தையம்




உள்ளே நடக்கும்
ஓட்டப் பந்தயத்தில்
ஒன்றாவதாக வருபவனுக்கே
தாய்வயிற்றில் இருப்பதற்கான
தார்மீக உரிமை!

தொடுவானம்




இடம் மாறிக் கொள்ளலாம்
கொஞ்ச காலம் மட்டுமென,
ஆகாயம் இறங்கி வந்து
பூமியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது
உன்னை சுமக்க ஆசைப்பட்டு!

மழை



கைகளில் இருக்கும் குடையை
மடக்கி வைத்திடு!
தேவதையின் ஆசிர்வாதங்கள்
உன்னைத் தேடி வருகின்றன
மழையின் ரூபத்தில்!

பாவம் பணக்காரர்கள்




வருடத்திற்கொரு தம்பியோ தங்கையோ
விளையாடக் கிடைத்து விடுகிறார்கள்
சேரிக் குழந்தைகளுக்கு!

பாவம் பணக்கார குழந்தைகள்
பஞ்சுமெத்தையில் கட்டிப்பிடித்து தூங்குகின்றன
உயிரில்லாத கரடி பொம்மைகளை!

கனவு




எல்லோரும் உறங்குவதற்காக
கனவு காண்கின்றார்கள்!
கனவு காண்பதற்காக
நான் உறங்குகிறேன்!
நீ கனவில் வருவாயென!

கால்கள்




தங்க கொலுசிட்டு
காரில் செல்லும் கால்களுக்கு,
எப்படி தெரியும்
தார்சாலையில் செருப்பின்றி
நடந்து செல்லும்
கால்களின் துயரம்!

பி.கு-
பதினொன்றாம் வகுப்பு
பருவக் குமரி முதல்
ஆறாவது படிக்கும்
அரைடவுசர் பையன் வரை
வெயிலில் வெறும் கால்களுடன்
பள்ளிக்கு வருபவர்களை
கண்டதன் வருத்தம்
இக்கவிதை...

தலைப்பில்லா கவிதை




தொடர்ந்து அடித்த மழை
சற்று ஓய்ந்திருக்கிறது
மகிழ்ச்சியுடம் சிலர்
சுள்ளி பொறுக்க செல்கின்றர்!
நான் மட்டும் சோகமாக இருக்கிறேன்
நாளை பள்ளி செல்ல வேண்டுமே!

நல்லவன்



குடிக்க பாலின்றி
குமறிக் கொண்டிருக்கிறது
குழந்தை...!
பாலாபிசேகம் செய்துகொண்டிருக்கிறான்
தலைவனின் கட்டவுட்டுக்கு
தகப்பன்...!

காதல் கனி




நீ கடித்து கொடுத்த
நெல்லிக் கனியை,
காதல் கனியென
நம்பிக் கொண்டிருக்கிறது
பாழாய்போன என்மனது!

அனுபவம்




தவறென்ற குழந்தைக்கு
அனைவரும் பெயரிடுகின்றனர்
அனுபவமென!

கூடு



இரை தேட
சென்ற பறவை
திரும்பி வந்தபோது
திகைத்து நின்றது
அதன் கூடிருந்த
மரத்தை காணாமல்!

உண்மையாகும் பொய்கள்




நீ உண்மையை மட்டுமே
சொல்லுகிறாயென ஒருநாள் வியந்தாய்!
உனக்காக நான் சொல்லும் பொய்களெல்லாம்
காதல் தேவதையால்
உண்மையாக்கப் படுதலை அறியாமல்!

பயணம்




அவமானங்கள்
இகழ்ச்சிகள்
புறக்கணிப்புகள்
துரோகங்கள்
அனைத்தையும் தாண்டி
என் பயணங்கள்,
வெற்றியைத் தேடி!

தாமரை




தொலைவிலிருக்கும்
குளத்திற்கு சென்று
வெண் தாமரையை
நீ பார்க்கத் தேவையில்லை!
அருகில் இருக்கும்
கண்ணாடியைப் பார்த்தாலே போதும்!

ஞாபகம்




ஒவ்வொறு நாளும்
ஞாபகங்களை சுமந்துகொண்டு
முடிந்து விடுகிறது!

அடுத்த நாள் தொடங்குகிறது
எல்லா செயல்களையும்
ஞாபகங்களாக மாற்ற!

நிலவு




நிலம் வாங்கவில்லையா
நிலவில் வசிக்க என்றாய்!

நான்தான் நிலவோடு வசிக்கிறேனே என்றேன்
உன்னைக் காட்டி!

நீ வெக்கப்பட ஆரமித்தாய்
பரவியது நிலவு வெளிச்சம்!

குழந்தை போல




ஊருக்கு சென்ற
அன்னையின் வரவை எதிர்நோக்கி
வாசலில் காத்திருக்கும்
குழந்தை மாதிரி
என்மனமும் காத்திருக்கிறது
உந்தன் வருகைக்காக தினமும்!

தலைப்பில்லா கவிதைகள்



சில சமயங்களில்
ஒரே கருவில்
பல குழந்தைகள்
பிறப்பது போல
ஒரே கவிதைக் கருவில்
உண்டாகி விடுகின்றன
ஓராயிரம் கவிதைகள்!

வரம்



காதல் கவிதை
எழுத மட்டும்
வரம் கொடுத்தாள்
காதல் தேவதை!

எறும்பு




வரிசை வரிசையாக செல்லும்
எறும்புகளுக்கு நடுவே
விரலால் கோடிட்டுவிட்டு
அமைதியாக இருக்கின்றேன்!

அவை கைவைத்தவனை
வசை பாடுவதில்லை
கையெடுத்து கடவுளையும்
துனைக்கு அழைப்பதில்லை!

கலவரமாக கலைந்தோடினாலும்
கவலை கொள்ளாமல்
மீண்டும் வந்துசேர்கின்றன
வரிசைக்கு நிதானமாய்!

பி.கு-
படத்திற்காக ஒரு கவிதை

சில படங்கள்
கவிதைகளுக்காக!
ஆனால் இக்கவிதை
இப் படத்திற்காக!

காதல் கவிதை


காதலில் காமம்
கடுகளவும் இல்லையென
நானும் காதலியும்
விவாதம் செய்ததில்
விரையமானது நேரம்

காலம் கடந்த்தில்
காரிருள் சூழ்ந்தது
கைதவறி காதல்
கீழே விழுந்தது

பதறிய படியே
காதலை தேடும்போது
கையில் தட்டுப்பட்டது
இருவரின் காமமும்

கடவுளுக்காக காத்திருப்பு




என்மீது வீசப்பட்ட கற்கள்
சதைகளை பதம் பார்த்து
ரத்தம் தோய்ந்து விழுகின்றன
நான் வாழ்கின்ற பூமியில்!

என்னுடன் ஒன்றாக
இன்பம் அனுபவித்தர்களும்
கூட்டத்தில் கலந்திருக்கின்றனர்
கருனையோ கலக்கமோ இன்றி!

நான் மட்டும் நம்பிக்கையுடன்
நெடுநாட்களாய் காத்திருக்கிறேன்
இந்த தவறுகளை எல்லாம்
தடுக்க வரும் கடவுளுக்காக!

உங்களிடம் இருக்கும் கைப்பேசியிலிருந்து
கடவுளின் கைப்பேசி எண்ணிற்கு
ஒரு அழைப்பை விடுங்கள்
இந்த அபலையின் துயர்தீர!

என்ன செய்ய?




உன் வீட்டு
வாசல் கதவை
சாத்திச் சென்றார்
உன்அப்பா!

உன் அறை
ஜன்னல் கதவை
திறந்து வைத்தாய்
நீ!

என்ன செய்வதென தெரியாமல்
அங்கேயே நின்றேன்
நான்!

தீவிரவாதம்




தேவதைகள் கூட
கவச உடையனிந்து தான்
வருகின்றன
வரம் தருவதற்கு!

சிந்தனையில் கடவுள்



அழிந்துவிட்ட அகிலத்தை
மீண்டும் உருவாக்கிய கடவுள்
சிந்தனையில் இருக்கிறார்.

யாரை முதலில் உருவாக்குவது
ஆதாமையா? ஏவாலையா?
இல்லை, சென்றமுறை போல
சாத்தானையா?

பொம்மையின் கனவு




தெருவில் கிடக்கும் பொம்மை
கனவு கண்டுக் கொண்டிருக்கிறது
குழந்தையுடன் விளையாடுவதைப் போல!

ஒன்றிற்கு ஒன்று




புகழ் பெற்ற அனைவரும்
புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்
தனிமையின் சுகமும்
தனியாத சுகந்திரமும்
விலைக்கு போய்விட்டதை
எண்ணி எண்ணி!

இது புரியாது சிலர்
போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்
புகழ் பெருவதற்கு!

விலகி இரு



அன்பே
உன் தோழிகளிடமிருந்து
எப்போதும் விலகியே இரு
ஏனென்றால்
நீ அருகிலிருக்கும் போது
அவர்கள் மங்கலாகவே தெரிகின்றனர்
எல்லோர் கண்களுக்கும்!

காதல்



மனங்களை இணைக்கும்
மதங்களை பிணைக்கும்
ஒரே மந்திரச் சொல்!

காத்திருப்பு




நீ பேசும் போது
மாறி மாறி
முத்தமிட்டுக் கொள்ளும்
உந்தன் உதடுகளுக்கு
முத்தம் கொடுக்க
நெடுநாளாக காத்திருக்கின்றன
எந்தன் உதடுகள்!

பிஞ்சு கையெழுத்து




வீடு முழுவதும்
இறைந்துக் கிடக்கிறது
படிக்கவே தொடங்காத
ஒரு பிஞ்சின் கையெழுத்து
ஓவியமாய்!

வரம்




இரவு முழுவதும்
பனியில் நனைந்து
ஒற்றைக்காலில் நின்று
தவம்செய்த ரோஜாவுக்கு
வரம்கிடைத்து வந்துசேர்ந்தது
உன் கூந்தலுக்கு!

எச்சில்




நீ குடித்த
குளிர்பானத்தின் மீதியில்
கொட்டிக் கிடக்கின்றது
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
தேடியலையும் தேன்துளி!

கனவு




என் கனவுகளும்
உன் கனவுகளும்
கனவு கண்டுகொண்டிருக்கின்ற
யாருமில்லா தீவில்!

மாற்றம்




மனித சங்கிலி!
கடையடைப்பு!
அன்பானவர்களின் உண்ணாநிலை!
பொது வேலை நிறுத்தம்!
உலக தமிழர்களின் தீக்குளிப்பு!
பட்டியல் நீண்டுகொண்டே போகிறது
ஈழத்தில் இறந்தவர்களின் பட்டியலோடு
போட்டி போட்டுக் கொண்டு – ஆனால்
எதுவும் மாறுவதாகவே தெரியவில்லை!

செய்தி-இலங்கை ரானுவம் தீவிர தாக்குதல்-2000 அப்பாவி தமிழர்கள் பலி.

காதல் சுகம்




பாறைப் போல
இறுகிக் கிடக்கும்
உன்னை காதலித்ததால்
வலிகள் மட்டுமே
எனக்கென மிஞ்சின!

உனக்காவது
காதலிக்கப் பட்டதன்
சுகம் கிடைத்ததா?
அன்பே!

ஒப்பந்தம்




நீ உடையை சரிசெய்யும்
அழகை ரசிப்பதற்காக
அடிக்கடி உடையை கலக்குமாறு
காற்றுடன் ஒப்பந்தம்
செய்திருக்கிறேன் நான்!

மழைத் துளி




உன் மேல் விழுந்த
முதல் மழைத் துளி
என்னிடம் தான்
பத்திரமாக இருக்கிறது!

அழகணி




உன் மாணவர்களுக்கு
அணிகள் பற்றி
பாடம் எடுத்துக் கொண்டிருந்தாய்
அப்போது தமிழில்
அழகணி என்றொருணனி
புதிதாக உண்டானது!

ஆசிர்வாதம்




உனக்கே தெரியாமல்
உன் விரல்
என் மேல் பட்ட
அந்த தருனத்தில்தான்
காதல் தேவதையால்
ஆசிர்வதிக்கப் பட்டேன்!

நேசம்




இந்த உலகில்
உன்னை விடவும் உன்னை
அதிகம் நேசிப்பவன்
நான் மட்டும்தான்!