ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

சனி, 18 ஏப்ரல், 2009

நிரம்பிக் கிடக்கின்றன


நிரம்பிக் கிடக்கின்றன

எல்லா ஏரிகளும் குளங்களும்
நிரம்பிக் கிடக்கின்றன
ஏழைகளின் குடிசைகளால்!

வானவில்

வானவில்


சாலையோர சாக்கடையில்
சிந்தியிருக்கும் சீமெண்ணை
இல்லாத வானவில்லையும்
இயல்பாக காட்டுகிறது!

கவிதை

சொல்லடி

சொல்லடி


காசுக்காக
கவர்ச்சி காட்டிடும்
பெண்ணைப் பார்த்த
பிறகும் கூட
எப்படிச் சொல்வேன்
என்தாயும் பெண்ணென!

ஜன்னல்

ஜன்னல்



நகரத்தில் இருக்கும்
ஜன்னல்கள் எல்லாம்
களவுக்கு பயந்தோ-இல்லை
காற்றுக்கு பயந்தோ
திறக்கவேப் படுவதில்லை
உந்தன் இதயத்தினைப் போல

அடியே மகளே!!!

அடியே மகளே!!!



கைம்பெண்ணாய் நானிருந்தும்
கல்லூரிவரை படிக்கவைத்தேன்!
கந்தல்துணி நான்னிந்தும்
கலர்கலராய் அணியவைத்தேன்!

உனக்காக தேய்ந்துபோய்
உடலால் ஓய்ந்துபோய்
ஒய்யாரமாய் ஓரிடத்தில்
ஓய்வெடுக்க துனிந்தபோது!

ஓடிப்போனாய் காதலனோடு
ஒன்றுமே தெரியாதவள்போல!
ஆடிப்போனேன் நான்
அடிமரமே சாய்ந்த்துபோல!

இப்போதுதான் தெரிகின்றது
என்பெற்றோரின் வலி!

பிரபலத்தின் கவிதை

பிரபலத்தின் கவிதை



ஒரு பிரபலத்தின்
கவிதைப் புத்தகமது
சிலர் கவிதைகள்
பார்த்தவுடன் புரிந்துவிடுகின்றன.
சிலர் கவிதைகள்
படித்தாலும் புரியமறுக்கின்றன
என்ன செய்வதென தெரியாமல்
அந்த பிரபலத்திடமே கேட்டால்
புரியாத கவிதையை
புரியவைத்து சென்றார்
அடுத்தநாளில் காத்திருந்தது
அனைத்து கவிதைகளும்
அவருக்காக.....

நவீன பசுக்கள்

நவீன பசுக்கள்


பசுவின் மடியிலிருந்து
பாலை கறந்துவிட்டு
ஏரிலும் பூட்டி
வேலை வாங்குகிறது
இந்த சமூகம்

வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டு வேலைகளையும் சேர்த்தே செய்கின்றனர்.அதற்காக இக்கவிதை.

வியாழன், 16 ஏப்ரல், 2009

காமம்

காமம்
குறிப்பு -
காதல் போல காமமும் ஒரு உணர்ச்சிதான்.வள்ளுவனே பாட்டெழுதி அங்கிகாரம் கொடுத்துவிட்டான்.அதன்பிறகு நமக்கேன் தயக்கம்.
தொடர்வோம்.

கவிதைகள்
காகித மேனியில்
பேனா மைவிந்து
செய்திட்ட புணர்ச்சியால்
பிறந்திட்ட குழந்தைகள் !

சேர்
நேற்று பெய்த மழையில்
தெருவெங்கும் சிறுசிறு குளங்கள்
நீமுன்னும் நான்பின்னுமாய் செல்கிறோம்
சேராக கூடாதென
உன்ஆடை மேல்செல்ல
சேரானது என்னவோ என்மனதுதான் !

உண்மை
கவிதை எழுதியே
காமம் தீர்க்கின்றேனென
கடுஞ்சொல் பேசுகிறாய் !
காமம் தீர்க்க
கவிதை வேண்டாம்
கையே போதும் !

வசதி
இரவுஉடை அணிந்திருந்தாய்
உந்தன் வசதிக்காக
எனக்கும் அது வசதியாகவே இருந்தது !

மிருகம்
கொஞ்சிச் சென்றவள்
அஞ்சிச் செல்லும்போது
அறிந்து கொள்கிறேன்
நான் ஆணென்பதை !

வரதட்சனை
ஒரு பெண்ணிடம்
பொருள் கொடுத்து
காமம் நடந்தால்
அது விபச்சாரம்
ஒரு பெண்ணிடம்
பொருள் பெற்று
காமம் நடப்பின்
அது சம்சாரம்

பெருளுடைய காமம்
உணர்வுகள் அற்றது
பொருளற்ற காமம்
உணர்வுகள் உடையது

வரதட்சனை என்ற
பெறும்பொருள் பெற்று
காமம் பெறுகின்றவர்களும்
விபச்சா ரன்கள்தான்

காதல் தோல்வி

காதலில் மட்டும் தான் தோல்வியின் வலிகளும் மிக அழகாக இருக்கும்.அந்த உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் உருவான அற்புதக் கவிதைகள் இவைகள்.

காதல் தோல்வி

நீ அழைக்கும் போது
கடவுள் போல வந்துவிடுவேன்
எங்கிருந்தாலும்!

நீ சொல்லும் போது
அடியாள் போல செய்துவிடுவேன்
எந்தவேலையையும்!

நான் நினைத்துக் கொண்டிருந்தேன்
நாம் காதலித்துக் கொண்டிருப்பதாய்!
பிறகு தான் புரிந்தது
நான்மட்டும் காதலித்துக் கொண்டிருப்பது!


நம்பமுடியவில்லை

மாலை வேளையில் தூக்கியெரியும்
நீ சூடிவாடிய மல்லிகையுடன்
என்காதலும் குப்பைக்கு போனதை
என்னால் இன்னும் நம்பமுடியவில்லை!

உடல் சாரா கவிதைகள்

உடல் சாரா கவிதைகள்-

இந்தக் கவிதைகளை எந்த தலைப்பின் கீழ் வரிசைப்படுத்துவது என தெரியாமல் நான் விழித்த போது தோன்றியது தான் உடல் சாரா கவிதைகள் என்ற தலைப்பு.இந்தக் கவிதைகளில் உடல் சார்ந்த எண்ணங்கள் இல்லை.இதனுடைய சில கவிதைகள் தலைப்பில்லா கவிதைகளாக மாறிவிட்டன.உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.அதுவே என்னை மேன்படுத்திக் கொள்வதற்கு உதவும்.


முகமூடி கவிதை

ஒருமுகம் போதவில்லை எனக்கு!
ஓராயிரம் தேவைப்படும் என்பது கணக்கு!
முகமாற்று சிகிச்சை செய்தால்
முடியுமோ இந்த வழக்கு!
முகமூடி சொல்கிறது
தானொன்றுதான் தீர்வென அதற்கு!


முடிவில்லா தீப்பந்தம்

ஒவ்வொரு தீக்குச்சியும்
கையை சுட்டுவிடும்
அளவிற்கு எரிந்தபின்
அனைந்து விடுகிறது!
இந்த மனம்மட்டும்
முடிவின்றி எப்பொழுதும்
எரிந்துகொண்டே இருக்கிறது!


அறிவுஜீவிகள் நாம்

கடவுள் எங்கிருக்கிறார்?
ஏதுசெய்து கொண்டிருக்கிறார்?
எந்தரூபத்தில் இருக்கிறார்?
புரியாத ஒன்றைப் பற்றி
பல காலம் பேசிவிட்டு
அருகேயிருக்கும் குழந்தையை
ரசிக்க மறந்துவிடுகின்ற
அறிவுஜீவிகள் நாம்!


விலகியிருங்கள் நண்பர்களே

விலகியிருங்கள் நண்பர்களே
விலகியிருங்கள்
தெரு நாய்களிடமும்
தெரிந்த ஆசிரியர்களிடமும்
ஏனென்றால் இரண்டும்
எப்போது குழையும்
எப்போது குறைக்கும்
என யாரும் அறியாததால்

பி.கு-
இந்த விலகியிருங்கள் நண்பர்களே கவிதை என் வாழ்க்கையின் மிக முக்கிய காலக் கட்டத்தோடு பொருந்தியது.நாம் நெருங்கிப் பழகும் சில ஆசிரியர்கள் முதலில் நம்மை வைத்து எல்லா விஷயங்களையும் அறிந்துக் கொள்கிறார்கள்.பின்பு அதை நமக்கு எதிராகப் பயண்படுத்துகிறார்கள்.அது போன்ற ஒரு சம்பவம் என்னுடைய வகுப்பில் நடந்தது.அந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் உதித்த கவிதை தான் இது.
இவ்வாறு எழுதியதைக் கண்டு என்னை ஆசிரியர்களை வெறுப்பவர்களின் பட்டியளில் இணைத்து விடாதீர்கள்.என்னுடைய பெற்றோர்கள் இருவருமே ஆசிரியர்கள்.


உடல் சாரா கவிதைகள், முகமூடி கவிதை, முடிவில்லா தீப்பந்தம்,
அறிவுஜீவிகள் நாம், விலகியிருங்கள் நண்பர்களே

உங்கள் முடிவென்ன?

உங்கள் முடிவென்ன?

என்னிலை என்னவென
எனக்கேதும் பிடிபடவில்லை
காப்பாற்ற வேண்டிய கணவன்
கண்மூடி கிடக்கிறான் கல்லறையில்!

நான் பிறந்ததிலிருந்து
என்னை அலங்கரித்த
பூவையும் பொட்டையும்
அவனோடு புதைத்துவிட்டனர்!

விதவையாக வெள்ளையுடுத்தி
வெளிஉலகை காணமல்
இருந்துவிட இயலுமா
இருபத்தியொராம் நூற்றாண்டிலும்?

என் பிள்ளைகளுக்காக
வேலைக்கு செல்லுகையில்
சிலர் வெறித்து பார்க்கின்றனர்
வேலியில்லா செடியென!

ஆதரவாக பேசிடும் ஆண்களெல்லாம்
ஆசையோடு பேசுவதாகவே தோன்றுகிறது
மறைமுக பேச்சுகளையெல்லாம்
மனதிற்குள் மறைத்துவிட்டு!

நிம்மதிக்காக கோவிலுக்கு சென்றால்
ஏசுவதற்காக இருக்கின்றனர் சிலர்
காதுகளை பொத்திக்கொண்டு
கடமைகளை செய்திடும் எனக்கு!

விடிவொன்று வேண்டும்-இந்த
வீணாய்ப்போன சமூகத்திலிருந்து
முடிந்தால் நீங்கள் கொடுங்கள்
இல்லை நானே எடுத்துக்கொள்கிறேன்!.

பெண் எழுதினால்

பெண் எழுதினால்

ஆணாக இருந்து பெண்ணுடலைப் பார்க்கும் போது, அதில் வெளிப்படுகின்ற காமத்தினை தடுக்க இயலவில்லை.அதன் காரணமாய் அவர்களின் வலிகளையும்,வேதனைகளையும் சொல்லுகின்ற இடத்தில் கொஞ்சம் காமமும் சேர்ந்து கவிதையின் கருவையே சிதைத்து விடுகின்றன.ஒரு கவிஞன் அதற்கு சம்மதம் தெரிவிக்கலாமா.கூடாதல்லவா,அதற்கு எனக்கு கிடைத்த தீர்வுதான் என்னை பெண்ணாக பாவித்து கவிதை எழுதும் முறை.

ஒவ்வொரு ஆணும் கருவரையில் சில காலம் பெண்ணாகத்தான் இருக்கின்றனர்.(நன்றி டாக்டர் ஷாலினியின் தமிழில் வலைப்பூ.)அந்த வகையில் பார்த்தால் நானும் பெண்ணாக இருந்திருக்கிறேன்.இப்போதும் நான் பெண்ணாக இருந்திருந்தால் எப்படியென சிந்தித்து சில பெண்ணுடல் சார்ந்த கவிதைகளுக்கு அவர்களாகவே என்னை மாற்றி எழுதியிருக்கிறேன்.

பல பெண் கவிஞர்கள் இருக்கும் போது அவர்களுக்கு இந்த கவிதைகளை விட்டுத் தராமல் எழுதுவது,ஒரு விதத்தில் என்னுடைய சுயநலம்.அதே வேளை அவர்கள் இந்தக் கருத்தையே ஏற்றுக் கொள்ளாமல் கூட இருக்கலாம்.பெண்ணுடலை அவர்களுக்கு சொந்தமானது என போர்க் கொடி உயர்த்தலாம்.இல்லை என் கவிதைகளின் பொருள் புரிந்து பாராட்டும் அளிக்கலாம்.இந்த எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் நான் எழுதிய கவிதைகளை படித்துவிட்டு கருத்துக்களைச் சொல்லுங்கள்.

என் கவிவுலகின் புத்தம் புது முயற்சியாய் வெளிப்பட்டிருக்கும் இதற்கு ஆதாரவுத் தாருங்கள்.

புதன், 15 ஏப்ரல், 2009

புத்தன்சொல்லை மறந்தவர்களே!

என்ன பாவம் செய்தது எம்மினம்?
பிழைக்க வழிதேடி வந்து
நீங்கள் பிழைக்கவும் வழிசெய்தது
ஒருவேளை குற்றமாக இருக்கலாம்!
உங்களின் மிருககுணம் அறியாமல்
சகோதராய் பழகியது குற்றமாகலாம்!
ஆங்கிலேயர்கள் நாட்டை கைப்பற்றி
உங்களை வருத்தியபோது
உயிரையும் கொடுத்து காப்பாற்றியது
எம்தமிழனம் என்பதை மறந்தீர்கள்!
செய்நன்றியை கொன்றுவிட்டு –இப்போது
செய்தவர்களையும் கொன்று கொண்டிருக்கிறீர்கள்!
நீங்கள் போற்றுவதெல்லாம் புத்தத்தை-ஆனால்
வேண்டுவதெல்லாம் ரத்தத்தையா?
புத்தன்சொல்லை காற்றில் பறக்கவிட்டு
புத்தன்பல்லை மட்டும்காப்பாற்றி என்னபயன்
என் அண்டை தேசத்தவர்களே!

சனி, 4 ஏப்ரல், 2009

ஈழக் கவிதைகள்

ஈழம்



தங்களுடைய பதவிநாற்காலிக்காக
தமிழகத்திலிருந்து இந்திமொழியை
விரட்டிய கூட்டம்
மடிந்துபோகும் தமிழினத்திற்காக
அறிக்கை மட்டும்
விட்டுக் கொண்டிருக்கிறது


என் நிலை

என் உடன்பிறந்தோரெல்லாம்
உயிர்விடும் நேரத்தில்
நான் உறங்கிக்கொண்டிருக்கிறேன்
ஒன்றுமறியாதவனாக


கடவுளிடம் கேள்வி



கல்மனம் படைத்த கடவுளே
உன்மனைவியை கடத்தினால் மட்டுமா
இலங்கைக்கு செல்வாய்
ஆமென்று சொன்னால்
அதையும் செய்வதற்கு தயார்
ஆனால் உன் மௌனத்தால்
எம் இனமல்லவா இல்லாமல்
போய்க் கொண்டிருக்கிறது


சொல்லுங்கள்



அனுமன் வைத்த தீ
இன்னுமா எரிந்து கொண்டிருக்கிறது
என் தமிழ்க்குழந்தைகள்
வாழும் இலங்கையில்

புதன், 1 ஏப்ரல், 2009

குழந்தைகள்

எல்லா மனிதர்களும் மயங்கி போய்விடும் சில இடங்கள் இருக்கின்றன.அவற்றில் ஒன்றுதான் மழலையின் சிரிப்பு.அந்த சிரிப்பில் நான் மயங்கியதன் விளைவுகளே இந்தக் கவிதைகள்.



அழகாக இருக்கின்றன
அந்தக் குழந்தைகள்
அவர்களின் அழகான
அம்மாக்களைக் காட்டிலும்



பேருந்தின் ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்து கொண்டு கேள்விகனைகளை
தொடுத்துக் கொண்டிருக்கிறது ஒருமழலை
சிலகேள்விகள் ஆச்சிரியமாய் இருக்கின்றன
சிலகேள்விகள் அபத்தமாய் இருக்கின்றன
எல்லா கேள்விகளுக்கும் விடையை
சலிக்காமல் சொல்லுகிறார் அவர்
நானும் குழந்தையோடு சேர்ந்து
பதிலினை அறிந்துக் கொள்கிறேன்


குழந்தையைப் பற்றிய கவிதைகளை பகிர்ந்து கொள்ளும் போது இதையும் இணைக்க வேண்டுமென தோன்றியது.என்னைப் போன்ற தமிழ் இணைய பதிவாளர்களை தேடிப் பயணப்பட்டேன்.அப்போது அனிதா என்ற அற்புதமான கவிதாயணியின் இதழ்கள் வலைப்பூ கண்களில் பட்டது.அதில் இரட்டிப்புமகிழ்ச்சி என்றொரு இடுகை,ஒரே நேரத்தில் தன் கவிதைகளையும்,குழந்தையும் பிரசிவித்திருக்கிறார் அந்த சகோதரி.

உயிர்மை, தீரா நதி, புதியபார்வை, உயிர் எழுத்து, பனிக்குடம், புதிய காற்று, வார்த்தை, உயிரோசை, நெய்தல், மணல் வீடு, ஆனந்தவிகடன், திண்ணை, வார்ப்பு என பல இதல்களில் வெளிவந்த அவர் கவிதைகளை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.முழுக்க முழுக்க அன்பினால் நிரப்பபட்ட அந்த முன்னுரையைப் படிக்க http://idhazhgal.blogspot.com/2009/03/blog-post.html க்கு செல்லுங்கள்.