ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

சனி, 23 அக்டோபர், 2010

காதலின் காத்திருப்பு




ஒரு நாள்
மழையோடு வந்தாய்!

மறு நாள்
மலரோடு வந்தாய்!

உந்தன் ஒவ்வொரு வருகையிலும்
உடன்வருபவர்களை வரவேற்கவே
காத்திருப்பதாக பொய் சொல்கிறேன்!

என்றாவது ஒருநாள்
எனக்கான காதலுடன்
வருவாய் என்பதற்காக!.

வியாழன், 21 அக்டோபர், 2010

அம்மனும் தீட்டு



அனைவரும் அர்ச்சகராகலாமென
சட்டம் கொண்டுவந்தும்
சத்தமில்லை இங்கு!

மூன்று நாள் வெளியேற்றப்படும்
உடல் அசுத்தங்கள்
அவளை அசுத்தமாக்கிவிட்டதாம்!

அறிவியல் சொல்கிறது
மாதவிடாயால் பெண்
தூய்மையாகின்றாளென்று!

அர்ச்சகர் சொல்கிறார்
அதனால் அவள்
அசுத்தமாகிவிட்டாளென்று!

நீயும் பெண்ணல்லவா தாயே
நீயே சொல்,...

அந்த நாட்களில்
அவர்கள் சொல்லும் தீட்டுடன்
கருவறையில் அமர்ந்திருப்பதை!

புதன், 13 அக்டோபர், 2010

பிச்சைக்காரன்



சுவாமி தரிசனம் முடிந்து
கோவிலின்வாசலுக்கு வருகிறேன்
கைகளை ஏந்தியபடி பலர் அமர்ந்திருக்கின்றனர்
பையி்ல் இருக்கும் சில்லறைகளை
சிலருக்கு கொடுத்துவிட்டு நடக்கிறேன்
கிடைக்காதவர்கள் நினைத்திருக்கக்கூடும்
நானும் பிச்சைக்காரனென!

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

எப்படி மாறியது



உலகிற்கே கணிதத்தினை தந்தவர்கள் இந்தியர்கள்

என்று அறிஞர்களெல்லாம் சொல்லுகிறார்கள்

ஆனால்

கணக்கு எனக்கு வர மாட்டேங்குதென

சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்!.

இதற்கு பெயர்தான் முரனோ!.

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

அன்னையானவள்



அரவனைத்து இருக்கவேண்டிய அன்னை

அடுத்தவேளை உணவுக்காக போராடுகையில்

இவள் அன்னையாக மாறிவிட்டாள்

தன்னுடைய சகோதரனுக்காக!...

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

சனி, 21 ஆகஸ்ட், 2010

அவர்களுக்கும்,...



நன்றாக வேலைசெய்து
கைநிறைய சம்பளம்
கணினிதுறையில் பெற்றார்கள்!

அவர்களுக்கும் திறமை இருக்கிறது.

வாங்கிய சம்பளத்துடன்
வீட்டிற்கு போகாமல்
கூத்தடிக்க சென்றார்கள்!

அவர்களுக்கும் சபலம் இருக்கிறது.

செவ்வாய், 27 ஜூலை, 2010

கள்ளக் காதல்




காதலனை பழி வாங்க
கள்ளக் காதல் தெய்வத்திற்கு - அவன்
புதல்வனை பலி கொடுத்து
சிறையில் இருக்கிறாள்!

கொலை செய்தமைக்கு
தண்டனை கொடுத்தாயிற்று!
கள்ளக் காதல் செய்தமைக்கு?

வியாழன், 22 ஜூலை, 2010

கோவில் குரங்கு!



"அடடே என்ன அதியம் இது!
ஒரு தலைக்கு பல உடல்
என்ன கோணத்தில் கண்டாலும்
வந்து நிற்கின்ற குரங்குகள்!"
என்றபடியே,....

கோவிலின் மேற்புறச் சுவரோவியத்தை பார்த்தபடி
சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தேன்!
அங்கு வந்த பள்ளி மாணவர்கள் குரங்கென்றார்கள்.
நெடுநேரம் கழித்தே எனக்கு தெரிந்தது,
அவர்கள் சுட்டிக்காட்டியது என்னையென!.

சனி, 10 ஜூலை, 2010

கொலை செய்யும் ஆசிரியர்கள்



படிக்கச் செல்லும்

பெண் குழந்தைகளின்

பாவாடைகளில் குறியாக இருக்கிறது

ஆசிரியர் சமூகம்!


மழலையாக நினைக்கச் சொல்லி

பெற்றோர்கள் விட்டுவந்த குழந்தைகளை

மனைவியாக நினைக்க சொன்னது யாரோ!

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.

திங்கள், 21 ஜூன், 2010

இங்கு சிறுநீர் கழிக்காதே!



அன்று காலை முதல்

வேலை தேடி

அலைந்து கொண்டிருந்தேன்

திடீரென சிறுநீர் உந்துதல் ஏற்பட

கழிவறையை தேடினேன்!.


ஆனால்

கண்ணில் பட்டதெல்லாம்

இங்கு சிறுநீர்க் கழி்க்காதே என்ற வாசகமும்

அதைக் காவல் காக்கும் கடவுளையும் தான்!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.

http://sagotharan.wordpress.com/

ஞாயிறு, 20 ஜூன், 2010

உண்மைத் தொண்டர்கள்



சிலை வழிபாடு வேண்டாமென

தன் காலம் முழுக்க எதிர்த்தவருக்கு

தெருக்கு தெரு சிலைவைத்து

கொள்கையை பரப்புகின்றார்கள்

தொண்டர்கள்!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.

http://sagotharan.wordpress.com/

ஆண்டவன்



காலம் முழுதும்

கடவுளை தூக்கிச் சென்றக் குதிரை

முடமாகிக் கிடக்கிறது

அருள் செய்வானோ ஆண்டவன்!

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

வெள்ளி, 11 ஜூன், 2010

உறவுகள்





அம்மாவின் அழுகுரல்,

உறவுகளின் கதரல் என ஒட்டுமொத்த சோகத்தையும்

ஒருசேர அழைத்துக் கொண்டு

தாத்தாவின் இறுதிபயணத்திற்காக பயணப்படுகிறன்.

வழியில்…

யாரென அறியாவிட்டாலும்

பாசமுடன் கையசைக்கின்ற

தெருவோரக் குழந்தைக்கு

பதிலுக்கு கையசைக்கின்ற போது

புரிகிறது…

ஒவ்வொருவரும் உறவுகளே என!

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

அருமை அப்பா




ஆயிரம் கதைகள் பேசித்திரிந்தோம்!.

ஆனால் இப்போது பேச ஒன்றுமில்லை,

அப்பா மகனுக்குள் !…

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

திங்கள், 10 மே, 2010

இயற்கை வரம்




பசுமை நிறைந்த காட்டை

பகையென நினைத்து வெட்டினோம்

வானுயர்ந்த மரங்களுக்கு பதிலாய்

வானமுட்டும் கட்டிடங்கள் கட்டினோம்

வீட்டின் கொல்லையில் கத்தும்

கிளியை துரத்திவிட்டு

தொலைக்காட்சியில் தொலைந்து போனோம்

நம் குழந்தைகள்

செல் தீர்ந்து போன

பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்

தனிமையாய்!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com/

அன்னை எவருக்கும் அன்னைதான்



குரங்கென்றாலும்

குழந்தையென்றாலும்

பசியென அழுதால்

பாராட்டி சீராட்டி

பாலூட்டும் அன்னை போல்

பாசம் காட்ட

யாரால் இயலும்!

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

உயிருனும் உயர்ந்தது ஒழுக்கம்




ஒவ்வொரு நாளும்

ஒழுக்கம் என்பதன் இலக்கணம்

மாறப் படுகிறது!

மீறப் படுகிறது!!

நாளை எவரேனும் முன்வரலாம்

திருக்குறளில் ஒழுக்கத்தின் குறள்களை நீக்குவதற்கு!

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/

திங்கள், 3 மே, 2010

அமிலக் காதல்



காதலித்து விட்டு

ஏமாற்றும் பெண்களை

கடவுள் தண்டிப்பதில்லை!

கடமையென சட்டமும் தண்டிப்பதில்லை!

ஏமாந்த ஆண்களின்

நினைவாக இருக்கின்றன

அமிலத்தில் கரைந்து போன

பெண்ணின் முகங்கள்!.

(காதலிப்பதாக சொல்லி ஒரு ஆண் ஏமாற்றினால், பெண் முறையிட இங்கு சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு ஆணை பெண் ஏமாற்றினால் இங்கு அவனுக்கு துணையாக எதுவும் இல்லை. எனவே பல இளைஞர்கள் ஆயுதமாக அமிலத்தை எடுக்கின்றார்கள்.)

மயிலிறகு சொல்லும் கதை






குட்டிப் போடுமென

குழந்தை தனமாகவோ!

விட்டுப் போன

காதலியின் நினைவாகவோ!

சுட்டுத் தந்த

நண்பனின் நினைவாகவே!

எல்லோரிடமும் இருக்கிறது

ஒரு குட்டி மயிலிறகு

கதைகளைச் சொல்லி மகிழ்ந்த படி!

பித்தனின் தேடல்



நெடுநேரமாய்

அவன் தேடிக் கொண்டிருந்தான்!

கடந்து செல்பவர்களிடமும் அவன் தேடல் இருந்தது

கீழே கிடப்பைவைகல் மீதும் அவன் தேடல் இருந்தது

தயங்கி தயங்கி

எதைத் தேடுகிறாய் என கேட்டேன்!


தன்னை தேடிக் கொண்டிருப்பதாக அவன் சொன்னான்!

நானும் தேடினேன் என்னை!

முதுமை வலி



மார் மீதும்

தோழ் மீதும்

போட்டு வளர்த்த மகள்

தன் மலம் அள்ளிப் போகும் போது

"இறைவா சாகும் வரம் கொடு"வென

படுக்கையில் இருக்கும் முதியவர் வேண்டுகிறார்.

"இறைவா இன்னும் பணிசெய்ய வரம் கொடு"வென

மகள் வேண்டுகிறாள்.

கடவுள் செய்வது புரியாது இருக்கிறான்,

என்னைப் போல!

புதன், 28 ஏப்ரல், 2010

அழகான கடவுள்



தங்கம் வெள்ளி என

வகை வகையாய் நகை அணிவித்து

அபிசேகம் ஆராதனை என

வகை வகையாய் பூஜை செய்து

கடவுள் காலடியிலேயே கிடந்தாலும்

அன்பில்லாத உள்ளத்தில் குடியேர விரும்புவதில்லை

எந்தக் கடவுளும்!

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

தடுத்தாட்கொண்டவன்



கோவிலுக்குள் நுழையப் போனேன்
அமர்ந்திருந்தவன் தடுத்தான்
“எதற்காகப் போகிறாய்”
“கடவுளைப் பார்க்க”
“கடவுள் அங்கில்லை”
“வேறெங்கே”
தட்டை நீட்டினான்
கடவுளானேன் நான்!

வருங்கால தமிழகமே



மகனுக்கு சொத்துன்னு
படிக்க வைச்சதை பார்த்திருக்கேன்
பேங்குல பணம் போட்டதை பார்த்திருக்கேன்
வீடு கட்டறத பார்த்திருக்கேன்
கோட்டையே கட்டி கொடுத்த தகப்பனை
இப்பதானே பார்க்கறேன்!

மனித பட்டாம்பூச்சி



கை கால் முளைத்த பட்டாம்பூச்சிக்கு
கல் குத்தும் போது வலிக்குமென
கவலை கொண்டேன்
ஆனால்…
அவளது பாதங்கள் பட்டு
கற்களெல்லாம் பூக்களாக மாறிப்போனது!.

இரவுப் பெண்


சீவி சங்காரித்து
அலுவலக்ம் போக ஏகம் பேர்


நிற்கும் ரயில் நிலையத்தின்
ஓர் அதிகாலை….

வந்து நிற்கின்றாள்
பெண்ணொருத்தி!.

இரவு தூங்கவில்லையென
அந்தப் பெண்ணின் கண்கள் சொல்லுகின்றன
அதிகம் உழைத்தை அவள் சோர்வு சொல்லுகின்றன

நீங்கள் தவறாக யூகம் செய்யாதீர்
அவள் கால்சென்டரில் வேலை செய்யும்
கன்னிப்பெண்!

சுமை தாங்கி



பார்க்கும் பொழுதெல்லாம்
நெஞ்சம் கணக்கிறது
அதன் பின்னால் இருக்கும்
கதையை எண்ணி!.

(சுமைதாங்கிகளை அமைப்பதில் ஒரு குறியீட்டுத் தன்மை கொண்ட அம்சமும் குறிப்பிடத் தக்கது. கருவுற்ற பெண்ணொருத்தி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இறந்துவிட்டால் அவளுக்காகப் பொது இடங்களில் சுமைதாங்கி அமைப்பது வழக்கமாக இருந்தது. இது சுமைதாங்கிபோடுதல் எனப்பட்டது. அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் நீங்கு என்பது நம்பிக்கை.)

விசும்பல்




தெருவில் அனாதையாகக் கிடக்கும்
கொலுசினை எடுக்கையில்
தொலைத்தவளின் விசும்பல் கேட்கின்றது!.

ஆச்சிரியம்




ஒரு கருமுட்டைக்காக
இலட்சம் விந்தனுக்கள் போட்டியிடும்
விந்தையைப் போலவே இருக்கின்றது
அரசியல் பதவிக்கான போட்டியும்!

நவீனப் பெண்


பைக் ஓட்டும் இளைஞன் பின்னால்
துப்பட்டாவில் முகம் புதைத்து
கட்டியனைத்து அமர்ந்திருக்கின்றாள்
வேறொருவனுக்கு மனைவியாகப் போகின்றவள்!.

மரணம்



ஒவ்வொரு கிணற்றுக்குள்ளும்
இருக்கின்றன
நீச்சலறியா பிஞ்சுகள்!

சிலுவை



கரும்பலகையில்
ஆசிரியர் எழுதிப்போன கூட்டல்குறி
மெல்ல மெல்ல வளர்ந்து
சிலுவைக் குறியாகிக் கொண்டிருந்தது
கணித வகுப்பிற்கு வந்த
உன்னை நினைத்து!

பாவிகள்



எல்லா இடங்களிலும்
காதல் புனிதமானது! – ஆனால்
காதலர்கள் தான்
பாவிகளாக்கப்படுகின்றார்கள்!

கோவில்



வெளியே நானும்
உள்ளே கடவுளும்
காத்திருக்கிறோம்
உன் வருகைக்காக!.

விந்தை


நீ
கிள்ளும் போது மட்டும்
சிரிக்கின்றன பூக்கள்!

வெள்ளிக் கிழமை



நீ வருவாய் என்பதற்காக
அலங்காரம் செய்து அமர்ந்திருக்கிறாள்
அம்பாள்!.

வெள்ளி, 26 மார்ச், 2010

இரவுப் பெண்




சீவி சங்காரித்து
அலுவலக்ம் போக ஏகம் பேர்
நிற்கும் ரயில் நிலையத்தின்
ஓர் அதிகாலை….
வந்து நிற்கின்றாள்
பெண்ணொருத்தி!.
இரவு தூங்கவில்லையென
அந்தப் பெண்ணின் கண்கள் சொல்லுகின்றன
அதிகம் உழைத்தை அவள் சோர்வு சொல்லுகின்றன
நீங்கள் தவறாக யூகம் செய்யாதீர்
அவள் கால்சென்டரில் வேலை செய்யும்
கன்னிப்பெண்!

கிராமத்தான்



சிறிய தொட்டியில்
ஒற்றை ரோஜா செடியை
வளர்த்து வருகிறான்
நிலம் விற்ற காசில்
பிளாட் வாங்கியவன்