வியாழன், 16 ஏப்ரல், 2009

உடல் சாரா கவிதைகள்

உடல் சாரா கவிதைகள்-

இந்தக் கவிதைகளை எந்த தலைப்பின் கீழ் வரிசைப்படுத்துவது என தெரியாமல் நான் விழித்த போது தோன்றியது தான் உடல் சாரா கவிதைகள் என்ற தலைப்பு.இந்தக் கவிதைகளில் உடல் சார்ந்த எண்ணங்கள் இல்லை.இதனுடைய சில கவிதைகள் தலைப்பில்லா கவிதைகளாக மாறிவிட்டன.உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.அதுவே என்னை மேன்படுத்திக் கொள்வதற்கு உதவும்.


முகமூடி கவிதை

ஒருமுகம் போதவில்லை எனக்கு!
ஓராயிரம் தேவைப்படும் என்பது கணக்கு!
முகமாற்று சிகிச்சை செய்தால்
முடியுமோ இந்த வழக்கு!
முகமூடி சொல்கிறது
தானொன்றுதான் தீர்வென அதற்கு!


முடிவில்லா தீப்பந்தம்

ஒவ்வொரு தீக்குச்சியும்
கையை சுட்டுவிடும்
அளவிற்கு எரிந்தபின்
அனைந்து விடுகிறது!
இந்த மனம்மட்டும்
முடிவின்றி எப்பொழுதும்
எரிந்துகொண்டே இருக்கிறது!


அறிவுஜீவிகள் நாம்

கடவுள் எங்கிருக்கிறார்?
ஏதுசெய்து கொண்டிருக்கிறார்?
எந்தரூபத்தில் இருக்கிறார்?
புரியாத ஒன்றைப் பற்றி
பல காலம் பேசிவிட்டு
அருகேயிருக்கும் குழந்தையை
ரசிக்க மறந்துவிடுகின்ற
அறிவுஜீவிகள் நாம்!


விலகியிருங்கள் நண்பர்களே

விலகியிருங்கள் நண்பர்களே
விலகியிருங்கள்
தெரு நாய்களிடமும்
தெரிந்த ஆசிரியர்களிடமும்
ஏனென்றால் இரண்டும்
எப்போது குழையும்
எப்போது குறைக்கும்
என யாரும் அறியாததால்

பி.கு-
இந்த விலகியிருங்கள் நண்பர்களே கவிதை என் வாழ்க்கையின் மிக முக்கிய காலக் கட்டத்தோடு பொருந்தியது.நாம் நெருங்கிப் பழகும் சில ஆசிரியர்கள் முதலில் நம்மை வைத்து எல்லா விஷயங்களையும் அறிந்துக் கொள்கிறார்கள்.பின்பு அதை நமக்கு எதிராகப் பயண்படுத்துகிறார்கள்.அது போன்ற ஒரு சம்பவம் என்னுடைய வகுப்பில் நடந்தது.அந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் உதித்த கவிதை தான் இது.
இவ்வாறு எழுதியதைக் கண்டு என்னை ஆசிரியர்களை வெறுப்பவர்களின் பட்டியளில் இணைத்து விடாதீர்கள்.என்னுடைய பெற்றோர்கள் இருவருமே ஆசிரியர்கள்.


உடல் சாரா கவிதைகள், முகமூடி கவிதை, முடிவில்லா தீப்பந்தம்,
அறிவுஜீவிகள் நாம், விலகியிருங்கள் நண்பர்களே

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!