ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

திங்கள், 23 நவம்பர், 2009

சிங்காரச் சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரில்
என்உள்ளம் மயக்கும் அளவிற்கு
எதுவும் அழகில்லை என
கால்கடுக்க அலைந்துவிட்டு
புலம்பிக்கொண்டிருக்கிறேன் நான்

கடவுளிருக்கும் கோவில்களும்
கட்சிகளிருக்கும் கலகங்களும்
வானுயர்ந்த கட்டிடங்களும்
வரலாறுபடைத்திட்ட சிலைகளும்
நாகரீக எச்சங்களாய் தெரிகின்றன

கடற்கரை மணலோடு
குப்பைகளாய் காதலர்கள்
எல்லாம்தாண்டி நிர்வாணியாக
இருக்கிறாள் வங்கக்கடல்
காவேரி மைந்தனின்
கவலையை போக்க!

வியாழன், 19 நவம்பர், 2009

காதல் கவிதை

ஒற்றை சிவப்பு ரோஜாவை
கையில் வைத்துக் கொண்டு
பூ பிடித்திருக்கின்றதா என்றாய்
ஆம் ரோஜாவை ஒரு பூ பிடித்திருக்கின்றது என்றேன்.
வெட்கத்தால் நீ சிவக்க தொடங்கினாய்!
இல்லை இல்லை
ஒரு ரோஜாவை மற்றொரு ரோஜா பிடித்திருக்கின்றது என்றேன்!

திங்கள், 16 நவம்பர், 2009

காதல் கவிதை

ஒவ்வொரு கவிதையின் முடிவிலும்
புதியதாக தொடங்குகிறது
உனக்கான என் காதல்!

செவ்வாய், 10 நவம்பர், 2009

காதல் கவிதை

நீ என்னிடம் கோபித்துக் கொண்டு
பேசாமல் போன அந்த நாட்களில்தான்
உன் காதல் அதிகமாக பேசியது
கவிதையாக!

காதல் கவிதை

வெட்கம் சிந்தும் பார்வை
நகை கடிக்கும் பற்கள்
மனதினை மயக்கும் தாவணி
நீ அப்படியே இருக்கிறாய்!
நான்கு வருட நகரவாழ்க்கையில்
நான் தான் மாறிவிட்டேன்!

செவ்வாய், 3 நவம்பர், 2009

படக் கவிதை

இந்தியா

சின்ன வளையத்திற்குள்
உடல் நுழைத்து
வித்தை காட்டி
விருது வாங்கிப் போனாள்
சீனப் பெண் !

கயிற்றின் மீது
பிடியில்லாமல் நடந்து
சாகசம் காட்டி
சாதனையாளனென பட்டம் வாங்கிப்போனாள்
கம்போடியாப் பெண் !

விதவிதமாய் பெண்கள்!
விதவிதமாய் முயற்சிகள் !

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி முடிந்துவிட
தெருவில் நடக்க தொடங்கினேன்
அங்கே
அவர்கள் செய்த அனைத்தையும்
சின்னப் பெண் ஒருத்தி
செய்து காட்ட
‘இப்படி பிச்சையெடுக்கறவங்க இருக்கிறவரைக்கும்
இந்தியா வல்லரசாகாது சார்’
என்றான் ஒருவன்
ஒரு ரூபாயை தூக்கிப் போட்ட உரிமையில் !

காதல் கவிதை

தார்கொதிக்கும் ரோட்டுல
தவிச்சுநான் வாரேயில
மிதிவண்டி கைபுடிச்சு
ஏன்புள்ள நடந்துவாரன்னு
எதிர்வந்து நீ கேட்க

அப்பன் வண்டில
நடுவுல இருக்கிற கம்பில
பாவாடை தேக்கிகொள்ள
பாவி மனுசனுங்க பார்வைதப்ப
நடந்துவரத நான் சொல்ல

இதெல்லாம் ஒரு சேதியான்னு
வெரசா வெல்டிங் கடையில
நடுகம்பி நீக்கி கொடுத்து
நெஞ்சில எடம் புடிச்ச

பொம்பள மனசறிஞ்சு
கஷ்டம் தீர்த்துபோரவனே
கடவுளுன்னு நான் சொன்னேன்
கணவன்னு கடவுள் சொன்னான்

பட்டாம்பூச்சி

நண்பர்களுடன் சேர்ந்து
பறக்கும் தும்பியை பிடித்து
அதன் வாலில் நூல்கட்டி
காற்று இல்லாமல் பறக்கும்
காற்றாடியை கண்டறிந்தவன் போல
கர்வத்துடன் வீடுசென்று காண்பிக்கையில்
உயிரை வதைத்து ரசிக்கிறான் உன்மகனென
அப்பா கொடுத்த அறையில்
கண்ணம் சிவக்க நான் அழுதபோது
கலங்கலான என் கண்களில் தெரிந்தது
நேற்று பிடிக்கையில் தவறிப்போன
பட்டாம்பூச்சி

கேள்வி

தலைநகருக்கு வந்த
தவறுநடந்து மாதம் மூன்றாகிறது
கைப்பேசியில் அழைத்து
நலம் விசாரிக்கும் அன்னையிடம்
வேலை குறித்த புதுபொய்யை சொல்லிவிட்டு
தூங்கப் போகின்றேன்
மனதின் கேள்விக்கு பதில் சொல்லாமலேயே.