புதன், 28 ஜனவரி, 2009

அம்மாவுக்காக- எழுதாமல் சென்றுவிடுவேனோ?

எழுதாமல் சென்றுவிடுவேனோ?
எங்கோ பிறந்தவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
என்னை பிறப்பித்தவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

உடன் உண்ணப்போறவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
உணவு இட்டவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

கைபிடிக்க போகின்றவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
கைபிடித்து சொல்லிக்கொடுத்தவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

வாலிபத்தை சுமப்பவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
வயிற்றில் சுமந்தவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

உடன் உறங்கப்போறவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
உறங்க தாளாட்டியவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

என்னுடன் வாழப்போறவளைப் பற்றி
கவிதை எழுதிவிட்டு
எனக்காக வாழ்பவளைப் பற்றி
கவிதை எழுதாமல் சென்றுவிடுவேனோ?

- ந.ஜகதீஸ்வரன்

1 கருத்துகள்:

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!