ஈசனின் பெருமையோடு

மதிமயங்கிய மனதின் மனித உணர்வு.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

புதன், 28 ஏப்ரல், 2010

அழகான கடவுள்தங்கம் வெள்ளி என

வகை வகையாய் நகை அணிவித்து

அபிசேகம் ஆராதனை என

வகை வகையாய் பூஜை செய்து

கடவுள் காலடியிலேயே கிடந்தாலும்

அன்பில்லாத உள்ளத்தில் குடியேர விரும்புவதில்லை

எந்தக் கடவுளும்!

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

தடுத்தாட்கொண்டவன்கோவிலுக்குள் நுழையப் போனேன்
அமர்ந்திருந்தவன் தடுத்தான்
“எதற்காகப் போகிறாய்”
“கடவுளைப் பார்க்க”
“கடவுள் அங்கில்லை”
“வேறெங்கே”
தட்டை நீட்டினான்
கடவுளானேன் நான்!

வருங்கால தமிழகமேமகனுக்கு சொத்துன்னு
படிக்க வைச்சதை பார்த்திருக்கேன்
பேங்குல பணம் போட்டதை பார்த்திருக்கேன்
வீடு கட்டறத பார்த்திருக்கேன்
கோட்டையே கட்டி கொடுத்த தகப்பனை
இப்பதானே பார்க்கறேன்!

மனித பட்டாம்பூச்சிகை கால் முளைத்த பட்டாம்பூச்சிக்கு
கல் குத்தும் போது வலிக்குமென
கவலை கொண்டேன்
ஆனால்…
அவளது பாதங்கள் பட்டு
கற்களெல்லாம் பூக்களாக மாறிப்போனது!.

இரவுப் பெண்

சீவி சங்காரித்து
அலுவலக்ம் போக ஏகம் பேர்

நிற்கும் ரயில் நிலையத்தின்
ஓர் அதிகாலை….

வந்து நிற்கின்றாள்
பெண்ணொருத்தி!.

இரவு தூங்கவில்லையென
அந்தப் பெண்ணின் கண்கள் சொல்லுகின்றன
அதிகம் உழைத்தை அவள் சோர்வு சொல்லுகின்றன

நீங்கள் தவறாக யூகம் செய்யாதீர்
அவள் கால்சென்டரில் வேலை செய்யும்
கன்னிப்பெண்!

சுமை தாங்கிபார்க்கும் பொழுதெல்லாம்
நெஞ்சம் கணக்கிறது
அதன் பின்னால் இருக்கும்
கதையை எண்ணி!.

(சுமைதாங்கிகளை அமைப்பதில் ஒரு குறியீட்டுத் தன்மை கொண்ட அம்சமும் குறிப்பிடத் தக்கது. கருவுற்ற பெண்ணொருத்தி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இறந்துவிட்டால் அவளுக்காகப் பொது இடங்களில் சுமைதாங்கி அமைப்பது வழக்கமாக இருந்தது. இது சுமைதாங்கிபோடுதல் எனப்பட்டது. அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் நீங்கு என்பது நம்பிக்கை.)

விசும்பல்
தெருவில் அனாதையாகக் கிடக்கும்
கொலுசினை எடுக்கையில்
தொலைத்தவளின் விசும்பல் கேட்கின்றது!.

ஆச்சிரியம்
ஒரு கருமுட்டைக்காக
இலட்சம் விந்தனுக்கள் போட்டியிடும்
விந்தையைப் போலவே இருக்கின்றது
அரசியல் பதவிக்கான போட்டியும்!

நவீனப் பெண்

பைக் ஓட்டும் இளைஞன் பின்னால்
துப்பட்டாவில் முகம் புதைத்து
கட்டியனைத்து அமர்ந்திருக்கின்றாள்
வேறொருவனுக்கு மனைவியாகப் போகின்றவள்!.

மரணம்ஒவ்வொரு கிணற்றுக்குள்ளும்
இருக்கின்றன
நீச்சலறியா பிஞ்சுகள்!

சிலுவைகரும்பலகையில்
ஆசிரியர் எழுதிப்போன கூட்டல்குறி
மெல்ல மெல்ல வளர்ந்து
சிலுவைக் குறியாகிக் கொண்டிருந்தது
கணித வகுப்பிற்கு வந்த
உன்னை நினைத்து!

பாவிகள்எல்லா இடங்களிலும்
காதல் புனிதமானது! – ஆனால்
காதலர்கள் தான்
பாவிகளாக்கப்படுகின்றார்கள்!

கோவில்வெளியே நானும்
உள்ளே கடவுளும்
காத்திருக்கிறோம்
உன் வருகைக்காக!.

விந்தை

நீ
கிள்ளும் போது மட்டும்
சிரிக்கின்றன பூக்கள்!

வெள்ளிக் கிழமைநீ வருவாய் என்பதற்காக
அலங்காரம் செய்து அமர்ந்திருக்கிறாள்
அம்பாள்!.