ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

வீர வணக்கம் !!!


நண்பனுக்காக என்றொரு கவிதையை எழுதியிருந்தேன்.முத்துகுமார் தன் உயிரை தியாகம் செய்யும் முன்பே.அதை சற்று திருத்தி தற்போது வெளியிட்டு அந்த தியாகிக்கு வீர வணக்கம் செய்கிறேன்.

செந் தீயால்
சாவை சந்தித்தாய்
பாவப்பட்ட மக்களான
பச்சை தமிழினத்துக்காக

தலைமுறைகள் சில
தடம்தெரியாமல் போனபின்னும்
மாற்றங்கள் என்றெதுவும்
மாறவில்லை நண்பா

சொந்தமண்ணில் கால்பதித்தால்
சொந்தமில்லாமல் போய்விடுகின்றது
கன்னிவெடியில் சிக்கி
கைகளும் கால்களும்

உயிருக்கு பயந்து
நாடுகடந்து போனாலும்
வாழ்வதற்கொரு வழி
எங்குமில்லை நண்பா

தாய்மண்ணை காக்கா
கூட்டம் உயிர்விடும்போது
உயிரைக் காக்க
விட்டிருக்கிறோம் தாய்மண்ணையே

எங்களிடம் மிச்சமிருப்பதெல்லாம்
இறந்தவர்களின் நினைவுகளும்
இருப்பவர்களின் கனவுகளும்
மட்டுமே நண்பா

ஈழம் பற்றிய சிந்தனைக்கு fortruetamilan.blogspot.com க்கு செல்லுங்கள்.

வீர வணக்கம் வீர வணக்கம்!!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!