வியாழன், 29 அக்டோபர், 2009

உடல்சாரா கவிதைகள்
மசக்கையாய் இருந்தபோது
மாங்காய்க்கு வழியின்றி
சாம்பல்தின்று மனம்தேற்றி
குறைபிரசவம் கூடாதேன
கூடவளர்ந்த கெடாயை
குலதெய்வத்திற்கு நேந்துவிட்டு
வலியெடுக்கும் காலம்நோக்கி
வயிற்றை தடவிக்கொண்டிருக்கிறாள்
பத்தாம் வகுப்பறையில்
பள்ளியில் இருக்கவேண்டியவள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!