ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

ஏழைக்கு உதவி கொடுங்கள்!சாதிகள் இல்லையெனச் சொல்லும்
அனைவரின் கைகளிலும்
சாதிச் சானிறிதல் இருக்கிறது
கள்ளத்தனமாக!.

தாழ்த்தப்பட்டவனாய் தாத்தா இருந்தமைக்கு
தற்போது பேரனுக்கும் பேத்திக்கும்
சன்மானம் கிடைக்கிறது
சலுகையாயாக!.

மருத்துவனாக, பொறியாளனாக, சட்டமேதையாக,
ஆட்சியாராக, அதிகாரியாக ஆக தகுதியிருந்தும்
பல பிள்ளைகள் தெருவில் நிற்கின்றார்கள்
அகதியாக!.

பாட்டன்மார்கள் செய்த தவறுக்கு
பேரன்களை தண்டித்தல் ஞாயமி்ல்லை
ஏழை, பணக்காரன் எல்லா சாதியிலுமிருக்க
சாதியை அடிப்படையாக கொண்ட
சலுகை திட்டத்தை மாற்றுங்கள்

தகுதிக்கு பதவி கொடுங்கள்!
ஏழைக்கு உதவி கொடுங்கள்!!

- அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்,.
http://sagotharan.wordpress.com/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!