செவ்வாய், 3 நவம்பர், 2009

இந்தியாசின்ன வளையத்திற்குள்
உடல் நுழைத்து
வித்தை காட்டி
விருது வாங்கிப் போனாள்
சீனப் பெண் !

கயிற்றின் மீது
பிடியில்லாமல் நடந்து
சாகசம் காட்டி
சாதனையாளனென பட்டம் வாங்கிப்போனாள்
கம்போடியாப் பெண் !

விதவிதமாய் பெண்கள்!
விதவிதமாய் முயற்சிகள் !

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி முடிந்துவிட
தெருவில் நடக்க தொடங்கினேன்
அங்கே
அவர்கள் செய்த அனைத்தையும்
சின்னப் பெண் ஒருத்தி
செய்து காட்ட
‘இப்படி பிச்சையெடுக்கறவங்க இருக்கிறவரைக்கும்
இந்தியா வல்லரசாகாது சார்’
என்றான் ஒருவன்
ஒரு ரூபாயை தூக்கிப் போட்ட உரிமையில் !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!