திங்கள், 21 ஜூன், 2010

இங்கு சிறுநீர் கழிக்காதே!அன்று காலை முதல்

வேலை தேடி

அலைந்து கொண்டிருந்தேன்

திடீரென சிறுநீர் உந்துதல் ஏற்பட

கழிவறையை தேடினேன்!.


ஆனால்

கண்ணில் பட்டதெல்லாம்

இங்கு சிறுநீர்க் கழி்க்காதே என்ற வாசகமும்

அதைக் காவல் காக்கும் கடவுளையும் தான்!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.

http://sagotharan.wordpress.com/

4 கருத்துகள்:

 1. சுத்தம் தேவைதான்...அதற்காக கழிவறையை கட்டாமல்...சுத்தத்தை எதிர்பார்ப்பது...
  புலியை பார்த்து பூனையை சூடு போட்டுகொண்ட கதை தான்...

  பதிலளிநீக்கு
 2. நல்ல விளக்கம். நடப்பது வேதனை .

  பதிலளிநீக்கு
 3. அருமை

  நன்மைகளையெல்லாம் அடைய வேண்டுமென்பது நல்ல விருப்பம்தான். ஆனால், தீமைகளை ஒழிக்கவில்லை என்றால் எப்படி நன்மைகள் கிடைக்கும், நிலைக்கும்?
  மகரிசி சிந்தைனைகள்

  பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!