தமிழ்நாட்டின் தலைநகரில்
என்உள்ளம் மயக்கும் அளவிற்கு
எதுவும் அழகில்லை என
கால்கடுக்க அலைந்துவிட்டு
புலம்பிக்கொண்டிருக்கிறேன் நான்
கடவுளிருக்கும் கோவில்களும்
கட்சிகளிருக்கும் கலகங்களும்
வானுயர்ந்த கட்டிடங்களும்
வரலாறுபடைத்திட்ட சிலைகளும்
நாகரீக எச்சங்களாய் தெரிகின்றன
கடற்கரை மணலோடு
குப்பைகளாய் காதலர்கள்
எல்லாம்தாண்டி நிர்வாணியாக
இருக்கிறாள் வங்கக்கடல்
காவேரி மைந்தனின்
கவலையை போக்க!
ஆஹா எப்படி இப்படியெல்லாம்
பதிலளிநீக்குஅருமையாக உள்ளது..... ஆனால் சகோதரர் சென்னையின் இரவை சிறிது கவனிக்க வேண்டும்......பின்பு அதை பற்றியும் ஒரு பதிவு இட வேண்டும்...
பதிலளிநீக்குஅது நகரத்தின் இன்னொரு முகம்....
தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும்... இது என்னுடைய கருத்து...
வருகைக்கும் கரு்த்துக்கும் நன்றிகள், நண்பர்களே!!
பதிலளிநீக்கு