வியாழன், 16 ஜூலை, 2009

வள்ளல்கள்
தத்தளிக்கும் முல்லைக் கொடிக்கு
தடி கொடுத்தால் போதாதா?
தமிழ்பாடும் கிழவிக்கு
தங்ககிலி கொடுத்தால் போதாதா?
காயம் பட்ட புறாவுக்கு
காலில் மருந்திட்டால் போதாதா?
மயில் ஆடும் அழகை
மதிநிறைய் ரசித்தால் போதாதா?

அறிவுகொண்டு ஆராய்ந்து கொடுக்க
அவகாசம் இல்லாமல் போனதற்கு
அன்புதான் காரணம் என்கின்றனர்
அனைத்தும் உணர்ந்தவர்கள்!

அதனால் தான்
மயிலுக்கு துணி! முல்லைக்கு தேர்!
ஔவைக்கு கனி! பறவைக்கு தசை!
வள்ளல்கள் கதைகளில்
வற்றாது நிறைந்திருக்கிறது
நகைச்சுவை நிகழ்வுகள்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!