திங்கள், 27 ஜூலை, 2009

குப்பைத் தொட்டி
எவனையோ ஓர் இரவு சுமந்ததில்
என்னை பத்து மாதம் சுமந்தவள்
காமம் தீர்ந்து அவன் போனபின்பு
கருவலேயே கலைக்க முடியாமல்
பெற்றெடுத்து கொடுத்து போயிருக்கிறாள்
குப்பைத் தொட்டிக்கு பிள்ளையாய்

9 கருத்துகள்:

 1. Miga alamana karuthukkal arumaiyana vaira varigal thodranthu padaiyungal.. follower gadget illaiya i wanted to follow you :-)

  Tamil font problem so typing in english nanba

  பதிலளிநீக்கு
 2. ஜகதீஷ்,

  உங்கள் கவிதைகள் எல்லாமே உணர்வுப் பூர்வமாகவும், ஆழ்ந்த பொருட்செறிவு உள்ளவையாகவும் இருக்கின்றன. சோளக்கொல்லை பொம்மை கவிதை சட்டென்று தைத்தது.

  ஹைக்கூக்களும் முயன்று பாருங்களேன்!

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 3. கவிதை கரு சிறப்பாக இருக்கிறது.... கொஞ்சம் வடிவத்தை (சுறுக்கி) மாற்றுங்களேன் (இது என் கருத்துதான்)

  பதிலளிநீக்கு
 4. //காதல் தீர்ந்து அவன் போனபின்பு///
  என்று சொல்வதைவிட

  காமம் தீர்ந்து அவன் போன பின்பு

  என்று சொல்லியிருந்தால்...?

  காதல் புனிதமானது....

  அருமை
  வாழ்த்துக்கள்....!

  பதிலளிநீக்கு
 5. //காமம் தீர்ந்து அவன் போன பின்பு

  என்று சொல்லியிருந்தால்...?//

  சரியே...

  பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!