வெள்ளி, 10 ஜூலை, 2009

வேண்டியதெல்லாம்
எம் தமிழ்மக்கள்
சொர்கத்திற்கு வரும்போது
மேளங்களின் தாளங்கள் வேண்டாம்!

அது அவர்களுக்கு
வெடிகுண்டுகளை ஞாபகம் செய்யக்கூடும்!

நாதசுரங்களின் நாதங்கள் வேண்டாம்
அது அவர்களுக்கு
துப்பாக்கிகளை ஞாபகம் செய்யக்கூடும்!

இன்னும் அங்கிருக்கும்
கற்பக விருச்சமோ காமதேனுவோ,
சோமபானமோ சொக்கும் நடனமோ,
எதுவும் வேண்டியதில்லை!

அவர்களுக்கு வேண்டியதெல்லாம்
இங்கு கிடைக்காத அமைதி மட்டுமே!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!