திங்கள், 3 மே, 2010

முதுமை வலிமார் மீதும்

தோழ் மீதும்

போட்டு வளர்த்த மகள்

தன் மலம் அள்ளிப் போகும் போது

"இறைவா சாகும் வரம் கொடு"வென

படுக்கையில் இருக்கும் முதியவர் வேண்டுகிறார்.

"இறைவா இன்னும் பணிசெய்ய வரம் கொடு"வென

மகள் வேண்டுகிறாள்.

கடவுள் செய்வது புரியாது இருக்கிறான்,

என்னைப் போல!

4 கருத்துகள்:

 1. மிக அருமை
  உண்மையின் சொருபம்
  இங்கே உள்ளது
  இறைவன் என்னசெய்வான்
  யாருக்கு அருள்வான்
  விடை தெரிந்தவர்கள்
  சொல்லுங்கள்
  நெஞ்சில் கனத்துடன்
  ஈஸ்வரன்

  பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!