வியாழன், 16 ஏப்ரல், 2009

உங்கள் முடிவென்ன?

உங்கள் முடிவென்ன?

என்னிலை என்னவென
எனக்கேதும் பிடிபடவில்லை
காப்பாற்ற வேண்டிய கணவன்
கண்மூடி கிடக்கிறான் கல்லறையில்!

நான் பிறந்ததிலிருந்து
என்னை அலங்கரித்த
பூவையும் பொட்டையும்
அவனோடு புதைத்துவிட்டனர்!

விதவையாக வெள்ளையுடுத்தி
வெளிஉலகை காணமல்
இருந்துவிட இயலுமா
இருபத்தியொராம் நூற்றாண்டிலும்?

என் பிள்ளைகளுக்காக
வேலைக்கு செல்லுகையில்
சிலர் வெறித்து பார்க்கின்றனர்
வேலியில்லா செடியென!

ஆதரவாக பேசிடும் ஆண்களெல்லாம்
ஆசையோடு பேசுவதாகவே தோன்றுகிறது
மறைமுக பேச்சுகளையெல்லாம்
மனதிற்குள் மறைத்துவிட்டு!

நிம்மதிக்காக கோவிலுக்கு சென்றால்
ஏசுவதற்காக இருக்கின்றனர் சிலர்
காதுகளை பொத்திக்கொண்டு
கடமைகளை செய்திடும் எனக்கு!

விடிவொன்று வேண்டும்-இந்த
வீணாய்ப்போன சமூகத்திலிருந்து
முடிந்தால் நீங்கள் கொடுங்கள்
இல்லை நானே எடுத்துக்கொள்கிறேன்!.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!