புதன், 1 ஏப்ரல், 2009

குழந்தைகள்

எல்லா மனிதர்களும் மயங்கி போய்விடும் சில இடங்கள் இருக்கின்றன.அவற்றில் ஒன்றுதான் மழலையின் சிரிப்பு.அந்த சிரிப்பில் நான் மயங்கியதன் விளைவுகளே இந்தக் கவிதைகள்.அழகாக இருக்கின்றன
அந்தக் குழந்தைகள்
அவர்களின் அழகான
அம்மாக்களைக் காட்டிலும்பேருந்தின் ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்து கொண்டு கேள்விகனைகளை
தொடுத்துக் கொண்டிருக்கிறது ஒருமழலை
சிலகேள்விகள் ஆச்சிரியமாய் இருக்கின்றன
சிலகேள்விகள் அபத்தமாய் இருக்கின்றன
எல்லா கேள்விகளுக்கும் விடையை
சலிக்காமல் சொல்லுகிறார் அவர்
நானும் குழந்தையோடு சேர்ந்து
பதிலினை அறிந்துக் கொள்கிறேன்


குழந்தையைப் பற்றிய கவிதைகளை பகிர்ந்து கொள்ளும் போது இதையும் இணைக்க வேண்டுமென தோன்றியது.என்னைப் போன்ற தமிழ் இணைய பதிவாளர்களை தேடிப் பயணப்பட்டேன்.அப்போது அனிதா என்ற அற்புதமான கவிதாயணியின் இதழ்கள் வலைப்பூ கண்களில் பட்டது.அதில் இரட்டிப்புமகிழ்ச்சி என்றொரு இடுகை,ஒரே நேரத்தில் தன் கவிதைகளையும்,குழந்தையும் பிரசிவித்திருக்கிறார் அந்த சகோதரி.

உயிர்மை, தீரா நதி, புதியபார்வை, உயிர் எழுத்து, பனிக்குடம், புதிய காற்று, வார்த்தை, உயிரோசை, நெய்தல், மணல் வீடு, ஆனந்தவிகடன், திண்ணை, வார்ப்பு என பல இதல்களில் வெளிவந்த அவர் கவிதைகளை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.முழுக்க முழுக்க அன்பினால் நிரப்பபட்ட அந்த முன்னுரையைப் படிக்க http://idhazhgal.blogspot.com/2009/03/blog-post.html க்கு செல்லுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!