புதன், 15 ஏப்ரல், 2009

புத்தன்சொல்லை மறந்தவர்களே!

என்ன பாவம் செய்தது எம்மினம்?
பிழைக்க வழிதேடி வந்து
நீங்கள் பிழைக்கவும் வழிசெய்தது
ஒருவேளை குற்றமாக இருக்கலாம்!
உங்களின் மிருககுணம் அறியாமல்
சகோதராய் பழகியது குற்றமாகலாம்!
ஆங்கிலேயர்கள் நாட்டை கைப்பற்றி
உங்களை வருத்தியபோது
உயிரையும் கொடுத்து காப்பாற்றியது
எம்தமிழனம் என்பதை மறந்தீர்கள்!
செய்நன்றியை கொன்றுவிட்டு –இப்போது
செய்தவர்களையும் கொன்று கொண்டிருக்கிறீர்கள்!
நீங்கள் போற்றுவதெல்லாம் புத்தத்தை-ஆனால்
வேண்டுவதெல்லாம் ரத்தத்தையா?
புத்தன்சொல்லை காற்றில் பறக்கவிட்டு
புத்தன்பல்லை மட்டும்காப்பாற்றி என்னபயன்
என் அண்டை தேசத்தவர்களே!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!