சனி, 4 ஏப்ரல், 2009

ஈழக் கவிதைகள்

ஈழம்



தங்களுடைய பதவிநாற்காலிக்காக
தமிழகத்திலிருந்து இந்திமொழியை
விரட்டிய கூட்டம்
மடிந்துபோகும் தமிழினத்திற்காக
அறிக்கை மட்டும்
விட்டுக் கொண்டிருக்கிறது


என் நிலை

என் உடன்பிறந்தோரெல்லாம்
உயிர்விடும் நேரத்தில்
நான் உறங்கிக்கொண்டிருக்கிறேன்
ஒன்றுமறியாதவனாக


கடவுளிடம் கேள்வி



கல்மனம் படைத்த கடவுளே
உன்மனைவியை கடத்தினால் மட்டுமா
இலங்கைக்கு செல்வாய்
ஆமென்று சொன்னால்
அதையும் செய்வதற்கு தயார்
ஆனால் உன் மௌனத்தால்
எம் இனமல்லவா இல்லாமல்
போய்க் கொண்டிருக்கிறது


சொல்லுங்கள்



அனுமன் வைத்த தீ
இன்னுமா எரிந்து கொண்டிருக்கிறது
என் தமிழ்க்குழந்தைகள்
வாழும் இலங்கையில்

3 கருத்துகள்:

  1. //கல்மனம் படைத்த கடவுளே
    உன்மனைவியை கடத்தினால் மட்டுமா
    இலங்கைக்கு செல்வாய்//

    ஆஹா! ரத்தினம்.
    உக்கிரமான வரிகள். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. கவிதையைப் படித்து வாழ்த்தியமைக்கு நன்றி வெங்கிராஜா

    அன்புடன்
    ஜகதீஸ்வரன்

    பதிலளிநீக்கு
  3. தங்களின் அற்புதமான வலைத்தளம் கண்டு களிப்புற்றேன். சிவப்பரம்பொருளின் திருப்படம் தாங்கிய தங்களின் வலைப்பூக்குள் நுழைந்ததும் அளவில்லா ஈர்ப்பு ஏற்பட்டது. மதம் கடந்தது இனம் என்பர்.ஈழக் கவிதைகள் என்ற வகைப்படுத்தலைக் கண்டவுடன் விரைந்து திறந்து பெருமையடைந்தேன். ஈழமக்களின் துயரை கவிதையாய் படம்பிடித்துள்ளீர்கள்.ஈழக் குடிமகன் எளியேன் என்பதால் நன்றி சொல்லவேண்டிய கடமை எனக்குண்டு. நன்றி சொல்வதை தவறாகக் கருத வேண்டாம்.நன்றி என்பது எளிமையாக அன்பைக் காண்டும் வழி.

    தங்கள் எழுத்துகள் மேலும் தழைத்தோங்க வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!