வெள்ளி, 20 மார்ச், 2009

நானும் மனிதன்

உடல் சாரா கவிதைகள்- நானும் மனிதன்

பிச்சைகாரனுக்கு சில்லரை
போடும் போதும்
விபத்தில் அடிப்பட்டவனுக்கு
உதவும் போதும்
வயதானவர்களுக்கு பேருந்தில்
இடம்கொடுக்கும் போதும்
துயரத்திலிருக்கும் நண்பனுக்கு
ஆறுதல்கூறம் போதும்
வெட்டப்படும் ஆட்டிற்காக
இரக்கப்படும் போதும்
உணர்ந்து கொள்கிறேன்
எனக்குள்ளும் மனிதன்
இருக்கிறான் என்பதனை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!