வெள்ளி, 20 மார்ச், 2009

நண்பர்களுக்காக ஒரு கவிதை



இந்த கவிதை என்னுடைய நண்பர்களுக்காக எழுதப்பட்டது.நான் அதிகம் காதல் கவிதைகளைப் பற்றிதான் எழுதுவேன்.ஆனால் இந்த முறை சற்று மாற்றம் ஏற்படக் காரணம்,எங்களுடைய பிரிவு.பி.டெக் படிப்பு இந்த வருடத்தோடு முடிகின்றது.நான்கு வருடம் பழகிய நண்பர்களை விட்டு பிரிந்து செல்வது மிகுந்த மன வேதனையை தருகின்றது.இருந்தாலும் வளர்ந்து வருகின்ற தொழில்நுட்ப புரட்சியில் பிரிவு சற்றுதான் பாதிக்கப் போகின்றது.அதை தான் கவிதையாக எழுதியுள்ளேன்.உங்களுடைய கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.

கல்லூரியின் முதல் நாளில்
புன்னகைப் பூச்செண்டுகளைப் பரிமாறி
அறிமுகம் செய்து தொடங்கினோம்
அற்புதமான நட்பென்னும் பயணத்தை!

இன்பமோ துன்பமோ எதுவந்தாலும்
ஒன்றாக அதனை சந்தித்தோம்!
ஒருவருடைய வளர்ச்சி பற்றி
மற்றொருவர் தானே சிந்தித்தோம்!

என்னுள்ளும் இருக்கிறது திறனென
எனக்கு ஊக்கம் கொடுத்து
சாதாரண மனிதனாய் இருந்தவனை
சாதனை மனிதனாய் மாற்றினீர்கள்!

முன்பெல்லாம் என்பேனா கசிந்தால்
கரையாகிடும் வெற்று காகிதங்கள்!-ஆனால்
இப்பொழுதெல்லாம் என்பேனா கசிந்தால்
கவிதையாகின்றன அதே காகிதங்கள்!

உணவு உடை உள்ளமென
எல்லாம் பகிர்ந்து கொண்டு
ஒருதாய் பிள்ளைகளாய் நாமிருக்கும்போது
வருகிறது பிரிவென்னும் பெருஞ்சக்தி!

கணினி மாணவர்களாய் இருந்துகொண்டு
பிரிவைப்பற்றி புலம்புதலில் அர்த்தமில்லை!
உலகையே இணைக்கும் இணையத்தில்
நம்மையும் இணைத்துக்கொண்டால் வருத்தமில்லை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!