வெள்ளி, 20 மார்ச், 2009

உடல் சாரா கவிதைகள்

எனக்கு பெண்களின் உடலைப் பற்றி கவிதை எழுதுதலில் சற்று ஆர்வம் நிறைந்திருக்கின்றது.இருந்தாலும் எல்லோருக்கும் பிடித்துபோல கவிதை எழுத ஆசை.(நான் காதல் கவிதைகளையும் பெண்ணுடல் பற்றி எழுதுவதும் என் பிடிக்காது.)சற்று கஸ்டப்பட்டு நான் எழுதிய கவிதைகள் தான் இவை.சில கவிதைகளை புரிந்துக் கொள்ள உங்களுக்கு சிரமாக இருக்கும்.அந்த கவிதைகளை பல முறை படிக்க வேண்டிய அவசியமும் ஏற்படலாம்.இருந்தாலும் எல்லா கவிதைகளையும் எளிய முறைப்படுத்த சற்று முயற்சி எடுத்திருக்கிறேன்.இந்த உடல் சாரா கவிதைகள் தொகுப்புகள் போல வெளிவந்து கொண்டே இருக்கும்.வளர்ந்து வருபவன் என்பதால் பிழைகளை பொறுத்தருளுங்கள் நண்பர்களே.

புத்தம் புதியதான
ஓர் சிந்தனையை
பகிர்ந்து கொண்டிருந்தேன்
யாரோ ஒருவர் சொன்னவைதான்
இதென்றான் நண்பன்
ஆம் நண்பா சென்றபிறவியில்
நான் சொன்னவைதான் அவையென்றேன்
நம்ப மறுத்து சென்றுவிட்டான்
நீங்கள் சொல்லுங்கள் உண்மையென்று

மழை வரும் போது
குடைதேடி ஓடுபவர்களை பார்த்தால்
சிரிப்பு வருகிறது எனக்கு
நான் மழையின் ரசிகன் என்பதால்

ஒவ்வொறு மூழ்கும்
எறும்பிற்கும் ஒருஇலை
போடப் படுகின்றது
எங்கோ இருக்கும்
புறாவிடமிருந்து.
நீங்கள் எறும்பாக இருந்தால்
இலைக் கேளுங்கள்
புறாவாக இருந்தால்
இலையைப் போடுங்கள்

நாளை நடக்கவிருக்கும்
விருந்திற்கு எல்லோரும்
தயாராகிக் கொண்டிருக்கின்றனர்
நன்றாக மெய்ந்துகொண்டிருக்கிறது ஆடும்
நாளை பலியாவதை அறியாமல்

பனி உருகி
நதியாக மாறி
கிளைகள் பிரித்து
கடலில் கலக்கும்
நிகழ்வுகளுக்கு நடுவே
என்கால் நனைத்து போகிறது.

நட்சத்திரங்களும் நிலவும்
இல்லாமல் போன
வெற்று வானத்தை
பார்த்து ரசிக்க முடியவில்லை
யாரேனும் வரைவதற்கு தெரிந்தால்
வரைந்து விடுங்களேன் சூரியனோடு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!