வெள்ளி, 20 மார்ச், 2009

காதல்-உரைநடைக் கவிதை

காதல் உலகத்தையே மாற்றும் சக்தி.காந்தியடிகள் முதல் ஷிட்லர் வரை எல்லோரையும் கட்டிப் போட்ட சக்தி.அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் மூலம் நமக்கு உறுதியாப் படுகிறது.

அன்னல் காந்தியடிகள் தன் குடும்பத்தைவிடவும் தேசத்தின் மீது அளவுகடந்த காதல் கொண்டிருநதவர்.கஸ்தூரிபாய் இறந்து அவரை எரியூட்டிக் கொண்டிருந்த சமயம் சுடுகாட்டிற்கு வந்தவர்கள் எல்லோரும் வீடு திருப்ப தொடங்கினர்.ஆனாலும் அன்னல் அவ்விடம் விட்டு அகலவில்லை.அவரிடம் வந்து சிலர் வீடுதிரும்பலாம் எனச் சொன்னபோது அவர் சொன்னார்,என்னுடனே இத்தனை காலம் இருந்தவளை பிரிந்த துயரத்தில் இருக்கிறேன்.எத்தனையோ பணிவிடைகளை செய்தவளை காதலோடு செய்தவள் எரியும் வரைக்கும் கூட உடனிருக்காமல் சென்றால் எங்கள் காதல் என்னை கேள்விகள் கேட்கும் என்றார்.

அகிம்ஷா மூர்த்திக்கு மட்டுமல்ல,லட்சக் கணக்கான ஆட்களை கொன்றுகுவித்த ஷிட்டருக்கும் காதல் இருந்தது.ரஷ்யாவின் படைகள் தன்னை சூழ்ந்து கொண்டபோது அவர்களிடம் மாட்டாமல் தன்மையாக உயிர் துறக்க தற்கொலை செய்ய துனிந்தான்.ஆனால் அப்போது அவன் தனியாக இல்லை தன் காதலியுடன் இருந்தான்.ஷிட்லரைவிட அவளுக்கு வயது குறைவு.எவ்வளவோ எடுத்துக்கூறியும் தப்பிப்பதற்கு மறுத்துவிட்டாள்.இறுதியாக ஷிட்லரை படைகள் நெருங்கிய போது ஷிட்லருடன் அவன் காதலியும் தற்கொலை செய்திருந்தனர்.உலகின் மிகக் கொடுரனாக வர்ணனை செய்யப்படும் ஷிட்லருக்கு இருந்த காதலைக் கண்ட உலகம் இன்றுவரை அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.


அப்படிப்பட்ட காதலை உரைநடைப் போல தபூசங்கர் என்னும் கவிஞர் எழுதியிருந்தார்.அவருடைய வழியில் நான் முயன்றுப் பார்த்தவைகள் இவைகள்.



நானும் நீயும் இரண்டு வருடங்களாக காதலித்துக் கொண்டிருக்கிறோம்.நான் உன்னை சீன்டுவதும் அதற்கு நீ பதிலுக்கு சீன்டுவதென பொழுதுகள் போகும்.அன்று என் முறை என்பதை உன் மௌனம் காட்டிக்கொடுத்தது.நீ வசிக்கும் ஊரின் மண் மட்டும் ஏன் சிவப்பு நிறத்திலிருக்கின்றது என்றேன்.காரணம் தெரிந்தால் சொல்லுங்கள் என்றாய்.நானும் நிலத்திடமே என்னவென விசாரித்தேன்.நீ வெக்கப்படும்போது நிலம் பார்த்துதான் இருப்பாயாமே அந்த வெக்கத்தைப்பார்த்தே சிவந்துவிட்டதாம் என்றேன். நீ வெக்கப்பட்டு நிலத்தை பார்த்தாய் அது இன்னும் ஆனது சிவப்பாக.



அன்று நீ கடற்கரைக்கு போகலாமா என்று ஆசையுடன் கேட்டாய்.அதற்கு நான் கடற்கரைக்கு மட்டும் வேண்டாம் வேறு எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்றேன்.எதற்காக கடற்கரைக்கு மட்டும் வேண்டாம் என்கிறீர்கள் என்றாய் சின்ன கோபத்துடன்.நெடு நாட்களாகவே நிலவைப் பிடிக்க அலைகள் விரும்புவதாய் தகவல் என்றேன் உன்னைப் பார்த்தபடி.உன்னைதான் நிலா என்கின்றேன் என்பதை புரிந்துகொண்டு மெதுவாகச் சொன்னாய் இந்த நிலவுக்கு சொந்தக்காரன் ஒருவன் என்னகில் இருக்கின்றான்,அவன் பாதுகாப்பான் என்றாய்.இருவரும் நடக்க தொடங்கினோம் கடற்கரையை நோக்கி.



நமக்கு திருமனம் ஆகி இதோடு இரண்டு மாதம் முடியப்போகிறது.ஆனாலும் உன்மேல் உள்ள காதல் வளர்ந்து கொண்டே இருந்தது எனக்கு.அன்று விடியல்காலையில் நீ குளித்து முடித்துவிட்டு ஈரக்கூந்தலுடன் கோலம் போட்டுக் கொண்டிருந்தாய்.நான் அப்பொழுதுதான் எழுந்து பல்விளக்கிவிட்டு வாசல் பக்கம் வந்தேன் நீ கோலம் போடும் அழகை ரசிப்பதற்கு.வானத்து வின்மீன்கள் எல்லாம் நம் வீட்டின் வாசலில் இருப்பது போல பிரம்மை ஏற்பட்டது எனக்கு.நீ கோலம் போடுவதற்கு வைத்த புள்ளிகள் வின்மீன்களாய் தெரிந்தன எனக்கு.ஏய் அழகுப் பேயே கோலம் போடுவதை நிறுத்து என்றேன்.ஏன் என்ற கேள்வியை கண்களில் காட்டியபடியே எழுந்து நின்றாய்.எத்தனை முறை நாம் பூமியிலிருந்து வின்மீன்களை ரசித்திருக்கின்றோம்,இன்று பூமியின் வின்மீன்களை அவை ரசிக்கட்டுமென கூறினேன்.ச்சீ இவ்வளவு தானா நான் பயந்து போய்விட்டேன்.சரிசரி நீங்க உள்ள போங்க நான் கோலத்தை முடிச்சிட்டு வந்துடறேன் என்றாய் கெஞ்சலாய்.ஆனால் உன்னை கோலத்தை முடிக்க விடாமல் உள்ளே இழுத்து வந்துவிட்டேன்.நம்மைப் பார்த்து விடிவள்ளி சிரித்துக்கொண்டிருந்ததுவெறும் புள்ளிகளுடன் வாசலில் இருக்கும் கோலத்தைக் கண்டு கேள்விக் கேட்போரிடமெல்லாம் எல்லாம் என் கணவர் செய்த கோலமென செல்ல கோபத்துடன் புலம்பிக் கொண்டிருந்தாய்.நம்முடைய காதலைப் பார்த்து அக்கம்பக்கத்தில் வியந்து போனார்கள்.

காதல்,love,உரைநடைக் கவிதை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!