வெள்ளி, 20 மார்ச், 2009

சிற்றன்னையின் கிராமம்


விடுமுறையென்றாலே ஓடிவருவேன்
சிற்றன்னையின் கிராமத்திற்கு
உச்சிபிளக்கும் வெயிலும்
தோகைவிரிக்கும் மயிலாய்
பச்சையுடுத்திய வயலும்
காட்சியளிக்கும் குளுமையாய்
அண்டைவீடும் என்வீடெனே
மழைபொழியும் பாசமாய்
ஆனால் இப்பொழுதோ
வீடெல்லாம் தன்னைச்சுற்றி
வேலி எழுப்பிவிட்டது
விளைநிலமெல்லாம் கல்ஊன்றி
காசுக்காய் விற்கப்பட்டுவிட்டது
செய்வதறியாது திகைத்துக்
கொண்டிருக்கின்றேன் நான்
என்னருகே சிட்டோன்று
நின்று கொண்டிருக்கின்றது
கூடகட்ட இடம்தேடி
வாயில் செத்தைகளுடன்.

இந்த கவிதையைப் பற்றி கட்டூரையைப் படிக்கும் ஆவலிருந்தால் என்னுடைய பட்டாம்பூச்சி (http://jagadeesktp.blogspot.com/) வலைதளத்தில் உள்ள நான் அழும் நிலையிலுள்ள கவிஞன் கட்டூரையைப் பாருங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!