வெள்ளி, 20 மார்ச், 2009

நானும் வள்ளல்தான்

நானும் வள்ளல்தான்

நந்துபோன சேலை
ஏழ்மையின் உண்மையை
எனக்குள் விதைக்கின்றது

வெற்று நெற்றி
கணவன் இறந்ததை
கண்களுக்கு சொல்லுகின்றது

கையிலிருக்கும் குழந்தை
பசியின் கொடூரத்தால்
கதறிக் கொண்டிருக்கிறது

அருகில் இருப்பவரெல்லாம்
கருனையோடு காசுபோட
என்னிடம் திரும்புகிறாள்

நானும் அவளுக்கு
சில்லரைகள் போடுவேன்
வேலை கிடைத்தவுடன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!