வெள்ளி, 20 மார்ச், 2009

உடல் சாரா கவிதைகள்

உடல் சாரா கவிதைகள்

வானத்தில் கூட
போர் நிகழ்கின்றதா
மழை பெய்தபின் வரும்
வான’வில்’லை பார்த்து
கேள்விகள் எழுப்புகிறது
ஒரு மழலை

எதையுமே சந்தேகத்தோடு
ஆராய்ச்சி செய்திடும்
என்னுடைய சமூகமே
பறவைகளின் எச்சத்தில்
செய்யும் ஆராட்சியை
இதோடு விட்டுவிட்டு
ஏதாவது நல்லதை
செய்யப் பாருங்கள்

வானம் சுற்றியிருந்த
வனத்தின் சாம்பல்கள்
கருமேகமாய் மாறிக்கொண்டிருந்தன
பள்ளிவிட்ட குழந்தையாய்
தாயிடம் திரும்பியது
மழைத் துளிகள்
காசுகொடுத்து வாங்கமுடியாத
வாசமொன்று கிளம்பியது
வறண்ட மண்ணிலிருந்து

நம்முடன் சேர்ந்து
ஒன்றாய் இருந்த
நண்பர்களை யெல்லாம்
மறந்து விடுகிறது
எதிரியை மறக்காத
நன்றிக்கெட்ட மனது

உடல் சாரா கவிதைகள்,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!