ஞாயிறு, 29 மார்ச், 2009

கனவு தேசம்



நெடு நாட்களாய்
எதுவும் மாறவில்லை
நாம்வாழும் தேசத்தில்.

மாற்றங்கள் ஆழ்பவர்களின்
பெயரில் மட்டுமே
நடந்து கொண்டிருக்கின்றன.

மக்களின் வாழ்க்கையிலோ
மாற்றங்களின் விதிகள்
பொய்த்துப் போய்விட்டன.

ஐந்தாண்டுக்கு ஒருமுறை
தூக்கம் கலைந்து
எழுந்து விடுகிறோம்.


வந்துபோகும் தேர்தல்களில்
வாக்களித்துவிட்டு வந்துவிடுகிறோம்
மீண்டும் தூங்குவதற்கு.


கனவிலாவது நம்தேசம்
நன்றாக இருப்பதால்.

4 கருத்துகள்:

  1. ஐந்தாண்டுக்கு ஒருமுறை
    தூக்கம் கலைந்து
    எழுந்து விடுகிறோம்.


    வந்துபோகும் தேர்தல்களில்
    வாக்களித்துவிட்டு வந்துவிடுகிறோம்
    மீண்டும் தூங்குவதற்கு///

    இந்த வரிகள் ரொம்பவே நல்லாருக்கு நண்பரே!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஷீ-நிசி

    உங்கள் பாராட்டுகளும் விமர்சனங்களும் தான் என்னை மெருகேத்த உதவும்.

    பதிலளிநீக்கு
  3. மாற்றம் ஓட்டுக்கு காசிலும் அல்லவா...!இன்று தேர்தல் தினம் வந்தாலும் ...மக்கள் சந்தோசமாய் ...வாங்கி போட தாயார். ம்ம்ம்ம். கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!