வெள்ளி, 22 மே, 2009

கைவிட்ட காவல் தெய்வம்
வீடுபுகுந்த ரானுவவீரர்கள்
தமிழ்ப் பெண்களின்
கற்பை சூரையாடும்போது
மாதந்தோறும் பொங்கலிட்டு
மாசிமாதம் கிடாய்வெட்டி
தலைமுறை தலைமுறையாய்
வணங்கி வந்த
ஊரின் எல்லையில்
கம்பீரமாய் வீற்றிருக்கும்
காவல் தெய்வம்
கடைசிவரை வரவேயில்லை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!