வெள்ளி, 22 மே, 2009

காதலும் காமமும்
வீதியில் நடக்கையில்
எதிர்வரும் உன்னை
விழிகள் தீண்டுகின்றன!

பார்வை பரிமாற்றங்கள்
நடந்த பின்னும்
ஒன்றுமறிதவளாய் நீ செல்கிறாய்!

கடந்த காலத்தின்
காதல் நினைவுகளை
கடந்து நான் செல்கிறேன்!

அன்று
காதலோடு காமமும்
கைகோர்த்து கொண்டதில்
கற்பென்பது கேள்விக் குறியானது!

இன்று
காலம் பலகாத்து
காமம் தீர்ந்ததில்
காதலும் தீர்ந்துபோனது!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!