வெள்ளி, 22 மே, 2009

காதலாக மாறிய காமம்
காதல் காமமாக மாறிய கதைகள்
பல தெரிந்திருக்கலாம் உங்களுக்கு
தெரிந்து கொள்ளுங்கள்
காமம் காதலாக மாறிய கதையை!

அம்பாளுக்கு சேவை செய்யும்
அம்மை முகத்தோடு அரை ஊனமான
ஆத்திகன் தான் நம் கதாநாயகன்!

கட்டிய பெண்டாட்டி இரண்டு மாதத்தில்
கட்டழகு மிக்கவனோடு ஓடி விட்டாள்
ஊரிலிருந்து வரும் பால்ய நண்பனின்
குத்தல் பேச்சிலிருந்து தப்பிக்க
உடனடிதேவை ஒரு வாடகை மனைவி!

ஊனம் நிறைந்தவனுக்கு ஊரில் பெண்ணில்லை
உண்மையைச் சொன்னால் உதவவும் ஆளில்லை
அன்று கோவிலுக்கு சென்ற கால்கள்
அடைந்த தென்னவோ வேசி வீட்டை!

தயக்கம் நிறைந்து பெண் கேட்க
தாசியோ சிரிப்பில் மூழ்கினாள்
ஓர்இரவுக்கு மட்டும் செல்பவளை
ஒருவாரம் வைத்திருக்க செலவுமேல் ஆகுமென்றாள்!

கிடைத்ததே வரமென கேட்டதை கொடுத்தான்
வரிசையாய்நின்ற மங்கைளில் ஒருத்தியை பெற்றான்
வீட்டில் தனியறை ஒன்றைக் காட்ட
வேசி திகைத்துப் போனாள்!

கடந்த விஷயங்களை பகிந்து கொண்டவுடன்
எல்லாம் அறிந்தவளாய் அமைதியானாள்
அந்தி மறைந்து பொழுது புலர்ந்ததும்
வந்தான் எள்ளிநகையாடும் கொள்ளிவாய் நண்பன்!

செதுக்கி வைத்த சிற்பம் போல்
சினேகிதனின் மனைவியிருக்க சீண்டிப் பார்த்தான்
கம்பீர உடல்தனை காண்பித்தான்!
காசினால் வலை விரித்தான்!

கண்டு கொள்ளாமல் போனவளை
கண்டு இவன் திகைத்தான்!
மன்மதன் என்றுதன்னை கொண்டிருந்த எண்ணங்களை
தூக்கிஎரிந்து அவள் காலில் விழுந்தான்!

பார்த்திருக்கிறேன் பல பத்தினிகளை
கணவன் கண்ணயர்ந்த்தும் கட்டிலுக்கு வந்தவர்களை
கண்ணதில்லை உன்னைப் போல் கற்புக்கரசி ஒருத்தியை
நடந்தவைகளை நண்பனிடம் சொல்லாதே என
நடையைக் கட்டினான் நடை பிணமாக

ஊனம் உடலில் இருக்கும் வரை
ஒருவருக்கும் துன்பமில்லை
அது மனதிலும் வந்துவிட்டால்
விரட்டியடிப்பதை தவிர வேறு வழியில்லை
பூசாரிக்கு புத்தி சொல்லி விட்டு
புறப்பட்டாள் பழைய இடத்திற்கு!

கருனையோடு பார்த்துக் கொண்டிருந்தவனை
கடந்து செல்லுகையில் கண்ணீர் சிந்தினாள்!
அவளின் கண்ணீரிலும் காதல் இருந்தது!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!